Header Ads



இலங்கையிலிருந்து அரபு நாடுகளுக்கு பெண்கள் சப்ளை - 3 பேர் கைது


சுற்றுலாப் பயணிகளை போன்று மூன்று இலங்கை பெண்களை மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு அனுப்ப முயற்சித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் 08-05-2016 இவர்களை கைது செய்துள்ளனர்.

மூன்று பெண்களிடம் தலா இரண்டு கடவுச்சீட்டுகள் இருந்தாகவும் தாம் எந்த நாட்டுக்கு செல்கிறோம் என்று இந்த பெண்கள் அறிந்திருக்கவில்லை எனவும் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி அர்ஜூன மாஹிங்கல தெரிவித்துள்ளார்.

மூன்று பெண்களையும் அரச சாட்சியாளர்களாக பயன்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் முகவர் ஒருவர் இருக்கக் கூடும் எனவும் தரகர்களுக்கு அரேபிய பிரதிநிதிகளிடம் பணம் கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.