Header Ads



இலங்கையில் 31 வீதமான அடிமைகள், தினமும் 250 மில்லியன் ரூபா செலவு

இலங்கையில் தினமும் 250 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்டுகள் நுகரப்படுவதாக இலங்கை புகையிலை நிறுவனம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் புகைப்பிடிப்பதனால் வருடாந்தம் 22,000 பேர் நோய்வாய்ப்பட்டு உயிரிழப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து மேற்கொண்ட ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில், புகைத்தல் காரணமாக சராசரியாக தினமும் 65 பேர் உயிரிழப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச புகையிலை தினம் தொடர்பான இரண்டு நாள் நிகழ்வுகள் நாளை ஆரம்பமாக உள்ளன.

இலங்கை மக்கள் தொகையில் 31 வீதமானவர்கள் புகைப்பிடிக்கும் (அடிமைகள்) பழக்கத்தை கொண்டிருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.