Header Ads



3 முறை பிறந்த நரேந்திர மோடிக்கு 3 திருமணங்கள்


எங்களுக்கு பி.ஏ., படித்த அல்லது எம்.ஏ. படித்த பிரதமர் தேவை இல்லை; நேர்மையான பிரதமரே எங்களுக்குத் தேவை என்று தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

தில்லியில் தன் தொண்டர்களிடையே பேசுகையில் தில்லி முதல்வர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:“ஒரு பிரதமர் மிகவும் குறைவாக படித்திருந்தால் அது ஒன்றும் குற்றம் இல்லை. ஆனாலும், தன் கல்வித் தகுதி என்ன என்பதை அவர் நாட்டிற்கு சொல்லிவிட வேண்டும்.’’பிரதமர் மோடி தான் பட்டம் பெற்றவர் என்று நாட்டு மக்களிடையே பொய் சொல்லியிருப்பதற்கு மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் கூறினார்.

“எம்.ஏ. படித்தவர்தான் அல்லது பி.ஏ. படித்தவர்தான் நம் நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்ப வில்லை.

ஆனால் அவர் ஒரு நேர்மையானவராக இருக்க வேண்டும்,’’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.