Header Ads



என்னுடன் தொடர்புகொள்ளாத 2 பேர் - நசீர் அஹ்மட்

கிழக்கு மாகாண சபையின் அதிகாரங்கள் என்ன என்பதை தெளிவாக நாங்கள் அறிந்து வைத்திருக்கின்றோம் என்று கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் தெரிவித்தார்.

வாழைச்சேனை மீராவோடை பாடசாலை குறுக்கு வீதிக்கு வடிகானுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

மாகாண சபைக்குறிய அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்துகின்ற மாகாண சபையாக கிழக்கு மாகாண சபை இன்று இருந்து கொண்டு இருக்கின்றது. இன்னும் இருக்கும் மாகாண சபை அதிகாரத்திற்குட்டபட்ட அனைத்து வேலைகளைச் செய்கின்ற மாகாண சபையாக நாங்கள் இருந்து வேலை செய்து கொண்டு இருக்கின்றோம்.

எந்தவித இன மத வேறுபாடுகளையும் மறந்து நாங்கள் தமிழர்கள், சிங்களவர் முஸ்லீம் என்ற வேறுபாடுகள் எதுவும் இல்லாமல் எல்லா பிரதேசங்களிலும் எங்களது வேலைத்திட்டங்களை சரியாக செய்து வருகின்றோம்.

இந்த நாட்டில் முதன் முதலாக நல்லாட்சியை உருவாக்கிய பெருமை கிழக்கு மாகாண சபைக்கே உரியது. அனைத்து கட்சிகளையும் பங்காளிக் கட்சிகலாக இணைத்து ஆட்சி செய்து வருகின்றோம்.

முதலமைச்சருக்கு பிரச்சினை என்ற போது மாகாண சபையில் உள்ள இரண்டு உறுப்பினர்களைத் தவிர மற்றய 34 உறுப்பினர்களும் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று குறிப்பாக சிங்கள உறுப்பினர்கள் கதைத்தார்கள். அவ்வாறு ஒற்றுமையாகத்தான் எங்களது மாகாண சபையை நடாத்தி வருகின்றோம் என்று தெரிவித்தார்.

6 comments:

  1. ஆரோக்கியமான விடயம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Now you have support of Hon. President...go ahead with valued achivement and for the benefit of people in EP

    ReplyDelete
  3. Can u name that two guys please

    ReplyDelete
  4. Can u name that 2 members name please

    ReplyDelete
  5. Who are the two members ?

    ReplyDelete
  6. உங்கள் தலைவரைப்போன்று மன்னிப்புக் கேட்கச் சொன்னவர்கள் 34பேரில் எத்தனைபேர்?

    ReplyDelete

Powered by Blogger.