Header Ads



ஜப்பானிடம் இருந்து 2.4 பில்லியன் ரூபா, கொடையை பெறவுள்ள சிறிலங்கா


கடலோரக் காவற்படைக்கு ஜப்பானிய அரசாங்கம் இரண்டு ரோந்துப் படகுகளை அன்பளிப்பாக வழங்க இணங்கியுள்ளது. 30 மீற்றர் நீளமுடைய ரோந்துப் படகுகளே சிறிலங்காவுக்கு வழங்கப்படவுள்ளன.

அத்துடன், ஜப்பானிடம் இருந்து 2.4 பில்லியன் ரூபா கொடையையும் சிறிலங்கா பெறவுள்ளது.

இதற்கான உடன்பாடு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜப்பானிய அனைத்துலக ஒத்துழைப்பு முகவரமைப்புக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உடன்பாடுகளுக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

No comments

Powered by Blogger.