சம்மாந்துறையில் கத்தியால் குத்தப்பட்டு, ஒருவர் படுகொலை
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்னல்கிராமத்தில் கத்தியால் குத்தி ஒருவர்கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (12) இரவு 8.30 மணியளவில் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 22 வயதுடைய இளைஞர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புடைய நபர் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment