முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கான குறிப்பு..!!
-எப்.எஸ்.எம். அஹமத், தமிழில்: முஹம்மத் றஸீன்-
முஸ்லீம்கள் - முன்னோக்கி ஒரு படி, பின்னோக்கி நான்கு படிகள்!
இலங்கையில் முஸ்லிம்கள் பிரதான சமூக நீரோட்டத்திலிருந்து நகர்ந்து செல்கின்றனர். அதற்கு எமது சிறுவர்கள் பெற்று வரும் கல்வி முறை முக்கிய காரணங்களில் ஒன்றாகும். சில தசாப்தங்களுக்கு முன்னைய முஸ்லிம் பள்ளிச் சிறுவர்களோடு, முஸ்லிம் பள்ளிக்கூடங்களிலும் மத்ரஸாக்களிலும் பயிலும் இன்றைய தலைமுறைச் சிறுவர்களை ஒப்பிடும்போது அவர்கள் சமுதாயத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டே வளர்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும்.
அளுத்கமையில் வசிக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்ட ஒரு குடும்பத்தின் முஸ்லிம் சிறுமி ஒருத்தி தனது குடும்பத்தினர் மற்றும் தனது அக்கம் பக்கத்துச் சிறுமிகள்; இப்போது பாடசாலைக்குப் பதிலாக மத்ரஸாக்களுக்கே அனுப்பப்படுகின்றர் எனக் கூறக்கேட்டபோது என்ன சொல்வதென்று புரியாத ஒரு கவலை எனக்கு ஏற்பட்டது. அங்கு குர்ஆன் கற்றலுக்கு அப்பால், ஓரளவு வாசிப்பு, எழுத்து மற்றும் சில எளிய கணித, சமையல் மற்றும் தையல் போன்றவை கற்பிக்கப்படுகின்றன. இஸ்லாமியக் கல்வியைப் பெறுவது மட்டுமன்றி அவர்கள் நிகாப் அணிவதால் அவர்கள் சமய ஈடுபாடு கூடியவர்களாகவும் உள்ளனர் என்று அவள் பெருமையுடன் கூறினாள். (நான் இங்கே ஒரு ஆச்சரியக்குறியைப் பயன்படுத்த விரும்பினாலும், அதற்கு பதிலாக ஒரு முற்றுப்புள்ளியைப் பயன்படுத்துகிறேன்)
முஸ்லிம் சனத்தொகையை அதிகமாகக் கொண்ட அளுத்கம போன்ற இடங்களில் மட்டுமன்றி கொழும்பில் கூட இந்தப் 'போக்கு'; அதிகரித்து வருகிறது என்பது வெளிப்படை. எமது சிறுவர்கள் முஸ்லிம் பாடசாலைகளில் சேர்க்கப்படுகின்றனர் அல்லது இஸ்லாமிய கல்வியை மட்டும் வழங்கும் மதரஸாக்களில் முழுநேர மாணவர்களாக சேர்ப்பதற்காக பாடசாலைகளிலிருந்து, நீக்கப்படுகின்றனர் என்பதை எங்கள் சமூகத்தினர் அறிந்தே உள்ளனர். ஆனால் நாம் மதச்சார்பற்ற அறிவு தவிர்ந்த, கல்வியைக் கருத்தில் எடுக்கு முன், முஸ்லிம் பாடசாலைகளைப் பற்றி பார்ப்பது அவசியம்.
முஸ்லிம் பாடசாலைகளுக்கு அனுப்பப்படும் எமது சிறுவர்கள் விஷயத்தில், அது ஒரு தேசிய முஸ்லிம் பாடசாலையாக அல்லது ஒரு முஸ்லிம் சர்வதேச பாடசாலையாக இருந்தாலும், பெற்றோர்கள் ஒரு முஸ்லிம் பாடசாலையில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கக் காரணங்கள் இருக்கலாம். இந்த காரணங்கள் பன்மடங்கு இருக்க முடியும். பெற்றோர் தங்கள் குழந்தைகள் மதச்சார்பற்ற கல்வியைப் பெறும் போது, அக்கல்வியை இஸ்லாமிய சூழலில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றோ அல்லது தங்கள் குழந்தைகளை 'மிகவும் விருப்பத்துக்குரிய' அரச அல்லது தனியார் படசாலைகளில் சேர்க்க இயலாமையாகவோ இருக்கலாம்.
நம் குழந்தைகளை ஒரு முஸ்லிம் பாடசாலைக்கு அனுப்புவதற்கான காரணம் எதுவாக இருந்தாலும், அவர்கள், ஒருவரேரடொருவர் தொடர்பற்ற, நண்பர்கள் இல்லாத மற்றும் வெறுமனே மற்ற மதங்களை மற்றும் இன மக்கள் பற்றி, எதுவுமே அறியாதவர்களாக வளர்;கிறார்கள் என்பதே வெளிப்படையானதும் இறுதி விளைவும் ஆகும். மற்ற நம்பிக்கைகள் மற்றும் இனங்களைச் சேர்ந்த குழந்தைகள் முஸ்லிம் நண்பர்கள் இல்லாமல் வளரும்போது, எது மோசமானது என்பதை என்னால் நிச்சயமாக கூற முடியாது. இது எங்கள் சமூகப் பேரழிவுக்கான ஒரு செய்முறையை இல்லையா? முஸ்லிம் பாடசாலைகளுக்கு தமது குழந்தைகளை அனுப்பும் பெற்றோர் பெரும்பாலும் அவர்கள் ஒவ்வொருவரும் தாம் கற்ற அரச அல்லது தனியார் பாடசாலைகளில் வௌ;வேறு மதங்களைச் சேர்ந்த பிள்ளைகள் இருந்தார்கள்; என்பதை அறிவார்கள். அவர்களுடனான நட்புறவு இன்றுவரை தொடர்ந்திருக்கலாம், அவர்கள் தமது நண்பர்களின் மொழியைக் கற்று, அவர்களது கலாச்சாரத்தையும் அறிந்திருப்பார்கள். அவர்கள் குழந்தைகளாக இருந்த போது உருவான அவர்களது நண்பர்கள் முஸ்லிம்கள் பற்றியும்; உறவுகள் மற்றும்; நம்பிக்கை பற்றியும் அறிந்திருப்பார்கள். அவர்கள் அனைத்து மதங்களையும் சேர்ந்த பிள்ளைகள் கற்கும் பாடசாலையில் படித்தனர் என்பதற்காக அவர்கள் ஒரு முஸ்லிமைவிட குறைந்தவர்கள் ஆகிவிடுவார்களா? இதற்காகவா இன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பும்; தேர்வை அவர்கள் மேற்கொண்டார்கள்? முஸ்லிம்களாகிய நாம் ஏனைய சமூகங்களிருந்து தூர விலகி இருந்தால் அவர்கள்; நம்மைக் குற்றம் சாட்டுவது உண்மையாகிவிடும். முஸ்லிமல்லாதவர்கள் எதிர்மறையாக எங்களை நோக்கும் வகையில் நம்மை சுற்றி ஒரு சுவரை எழுப்பியுள்ளோம். எனவேதான் அவர்கள் நாங்கள் யார், நாங்கள் என்ன செய்கிறோம் என்றெல்லாம் அறியாதிருக்கிறார்கள். நாங்கள் தஃவாவை மேற்கொள்ள வேண்டும் என்றால், சமாதான சகவாழ்வு அதன்பாட்டில் மலரட்டும். ஒருவருக்கொருவர் தொடர்பு அற்ற நிலையில் அவர்கள் எப்படி இஸ்லாத்தை அறிந்துகொள்வது?
குறிப்பாக மதச்சார்பற்ற பாடங்களில் எந்த உதவியும் பெறாத அல்லது சா.த அல்லது உ.த போன்ற தரமான பரீட்சைக்கு தோற்றாத, 11,12, 13 வயதிலிருந்து முழு நேர மத்ரஸா கல்வியை மேற்கொள்ளும் பிள்ளைகளை இப்போது பார்ப்போம். அவர்கள் இந்த பூமியில் தங்கள் வாழ்க்கையை வாழ 'உலக அறிவு' எதனையும் பெறாதவர்களாகவே வளர்கின்றனர். இஸ்லாமிய அறிவு ஒருவரின் வாழ்க்கைக்கு முற்றிலும் அவசியம், அதேநேரம் இஸ்லாம் உலக அறிவையும் வலியுறுத்துகிறது.
அறிவைப் பெற்றுக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை என்று கூறியுள்ளவாறு, அறிவைத் தேடிப் பெறுவதில் பாலினம் தடையாக இருக்க முடியாது. இறைதூதர் அறிவுக்கு அளித்த முக்கியத்துவம் அன்னாரது நடவடிக்கைகளில் தெளிவாகத் தெரிகிறது. பத்ர் யுத்தத்தின்போது, எந்த யுத்தக் கைதியும் 10 முஸ்லிம் குழந்தைகளுக்கு எழுதப் படிக்கக் கற்று கொடுத்து விடுதலை பெறலாம்; என்று அவர்கள் உத்தரவிட்டார்கள்;. அறிவு என்பது மார்க்க அறிவை மட்டும் குறிப்பதல்ல என்பதை இது உறுதிப்படுத்துகிறது. ஏனெனில் முஸ்லிம் அல்லாதவரிடமிருந்தும் இவ்வறிவு பெறப்பட்டுள்ளது. குர்ஆன் கூட இவ்வாறு கூறுகிறது:
'அவன் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் மனிதர்களுக்குப் பயன் தருபவற்றை (ஏற்றிக்) கொண்டு கடலில் செல்லும் கப்பலிலும் வானத்திலிருந்து மழையை இறக்கி அதைக் கொண்டு (வரண்டு) இறந்த பூமியை அல்லாஹ் உயிர்ப்பி(த்துச் செழிப்பாக்கி வை)ப்பதிலும், கால் நடைகள் அனைத்தையும் பூமியில் பரவ விட்டிருப்பதிலும் காற்றை(ப் பல கோணங்களில் திருப்பி)த் திருப்பி விடுவதிலும் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அமர்த்தப்பட்டிருக்கும் மேகத்திலும் (மனிதர்களுக்குள்ள பயன்களை ஆராய்ந்து) சிந்திக்கும் மக்களுக்கு (அவனுடைய அருளையும் அன்பையும் ஆற்றலையும் அறிவிக்கக்கூடிய) பல அத்தாட்சிகள் நிச்சயமாக இருக்கின்றன.'
(2:164)
உலக அறிவும் முக்கியம்தானே என்று ஒரு மத்ரஸா முதல்வரைக் கேட்டால் அதற்கான பதில் நிச்சயமாக ஆமாம் என்பதே ஆகும். நான் மத்ரஸாக்களை நடத்தும்; ஒரு சில நபர்களிடம் இது தொடர்பாகக் கதைத்தபோது, அவர்கள் எல்லோரும் அதனை ஏற்றுக்கொண்டனர், மற்றும் சிலர்; உலக அறிவு இல்லாமல் இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதோ பாராட்டிப் பேசுவதோ முடியாத காரியம் என்று கூறும் அளவுக்கு சென்றனர். எவ்வாறாயினும் அவர்களது மத்ரஸா, ஒரு முழு நேர மத்ரஸா கற்கை நெறியைப் பின்பற்றுவதற்காக பாடசாலைக் கல்வியை இடை நடுவில் கைவிட்ட குழந்தைகளைக் கொண்டதாகவே இருக்கிறது.
சமூக பொருளாதார நிலையில் சிறந்து விளங்கும் குடும்பங்கள் தாயின் கல்வியிலேயே தங்கியுள்ளது என்று அறியப்படுகிறது. குடும்பத்தில் இருந்தே முழு சமூகத்துக்கும் அது வியாபிக்கிறது. அதனால் தனியாக ஒரு மத்ரஸா கல்வி மட்டுமே எதிர்காலத்தில் ஒரு படித்த, ஆரோக்கியமான மற்றும் நிலையான முஸ்லிம் சமூகத்தின் தேவைக்குப் போதுமானதாக இல்லை.
முஸ்லிம்களிடையே மத்ரஸாவுக்கான வளர்ந்து வரும் பிரபல்யம் காரணமாக இந்த தேவையைப் பூர்த்தி செய்ய ஸ்தாபனங்கள் தேவைப்படுகின்து. எனினும், இந்த மத்ரஸாக்களை நிறுவுவதன் மூலம்; மக்கள் ஆன்மீக தேவையை மட்டுமே நாடுகின்றனர் என்று அர்த்தம் கொள்ள இயலாது. அமைக்கப்படும் இந்த பள்ளிக்கூடங்கள்; பொருள் தேவையையும் ஏற்படுத்துகிறது. அதிகமானோருக்கு, இவ்வாறான பாடசாலைகளின் உருவாக்கம் அல்லது கற்பித்தல் ஒரு தொழில் முறையாகவே உள்ளது. மத்ரஸாக்கள் நிறுவப்படுவதற்கான காரணங்களில் ஒன்று ஹிப்ழுல் குர்ஆன், ஆலிம் அல்லது ஆலிமாக்கள் என இந்த பள்ளிகளில் இருந்து அதிக அளவில் வெளியேறுபவர்கள், சம்பாதிப்பதற்கு மிகவும் வசதியான மற்றும் இலகுவான முறையாக தாமே சொந்தமாக ஒரு மத்ரஸா அமைத்தல் ஆகும். மத்ரஸாவின் தரத்தை கண்காணிக்க ஒரு கண்காணிப்பு அமைப்பின் குறைபாடு மற்றொரு விவாதத்துக்குரிய பகுதியாக உள்ளது. ஆனால் இங்கே அபாயகரமான ஒன்றாக நாம் காண்பது பிற முக்கிய தொழில்களில் இருந்து எங்கள் முஸ்லிம்கள் படிப்படியாக விலகிச் செல்வது என்பதுதான். அரசாங்க நிர்வாக சேவையில் முஸ்லிம்கள் மிக அரிதாகவே உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. எமது மக்கள் அரச தொழில் துறையில் வேலை பெறுவதில்லை என்ற ஒரு முக்கியமான அம்சத்தினை மட்டும் ஒருவர் வலியுறுத்த முடியாது, கொள்கை உருவாக்கத்தில் எங்கள் சமூகத்துக்காகக் குரலெழுப்புவோர்; மற்றும் பங்களிப்பாளர்கள் ஆகவும் இருக்க வேண்டும். எனவே, அதிகரித்து வரும் மத்ரஸாவில் கற்பிக்க மட்டுமே தகுதியுள்ள இளைஞர்களின் பிரச்சினைiளுக்கும் இதன் மூலம் சமூகத்தில் ஏனைய சமூக பிரச்சினைகளை உருவாக்கும் வேலையின்மை பிரச்சினைக்கும் நாம் விரைவில் பரிகாரம் காண வேண்டும்,
என் சக முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கான இந்தக் குறிப்பு, நம் சமூகத்தின் நலனை மட்டுமே உள்நோக்கி பார்ப்பதற்காக அல்ல. நம் சமூகம் இலங்கை சமூகத்தினை ஆக்குவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டில் நம் சமூக மற்றும் பொருளாதார நிலைப்பாடு முழு இலங்கை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். நான்கு படி பின்னோக்கி சமூக ஏணியில் கீழ் மட்டத்திலிப்பதைவிட சமூகத்தில் சாதகமாக தாக்கத்தை ஏற்படுத்துவதில் விவேகமாக செயல்பட வேண்டும். எனவே ஒரு சமூகமாக நம் குழந்தைகளுக்குக் கொடுத்து வரும் கல்வி முறைமையினை நாம் மறு பரிசீலனை செய்ய முன்வருவோமா?

கட்டுரையாசிரியர் சொல்வதைப் பார்த்தால் அவர் பெரும்பாண்மை சமூகத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் என எண்ணத் தோன்றுகிறது.
ReplyDeleteசமூகத்தில் முஸ்லிம்களாகிய எமக்கும் அந்நிய மக்களுக்கும் இடையிலான உறவு மேம்பட அவர்களுடைய கல்வித் திட்டம் போன்று எங்களுடையதும் வேண்டுமென எண்ணுவதும் அவர்களுடைய பாடசாலையில் சேர்ந்து படிக்க வேண்டுமென எண்ணுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
அதில் நன்மையான விளைவுகள் இருந்தாலும் தீய விளைவுகளும் கலாச்சார சீரழிவுகளுமே அதிகம் ஏற்படும்.
உதாரணத்திற்கு.....
உயர்தரம் வரை கிராமப்புற முஸ்லிம் பாடசாலையில் கற்று பல்கலைக்கழகம் சென்று அங்குள்ள பல்வேறுபட்ட மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து பல்கலைக்கழக கல்வியை முடித்து வெளியான மாணவர்களின் நிலையைப் பார்த்தால் விளங்கும்.
இதுவே இப்படி இருக்கும் போது முற்று முழுதாக அந்நிய பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் நிலை பற்றி என்ன கூறுவது???
Yes
Deleteit is true that assimilation is dangerous but they need to interact with them to give them dawa..we do not need to go their schools.. if we have good school. do that work.. alternately
ReplyDeleteகட்டுரையில் குறிப்பிட்ட விடயங்கள் ஆக்க பூர்வமானது அல்ல மத்ரசாக்களிலேயே காலத்திற்கு ஏற்ற பாடத்திட்ங்களை கொண்டுவேண்டுமே தவிர கலவன் என்ற பேச்சுக்கு இடமில்லை
ReplyDeleteYes
DeleteJaffna muslim web or arivatra thazhamaga maari varuvadu kawalaikuriyadu! Katturai aasiriyargalal idappadum katturai sariyaga meelaivu seiyamal pirasurikkappaduvadum pin mannippu koruvadum vaadikkai aagivittadu
ReplyDeleteஅருமை
ReplyDeleteVery good article. The point that some moulavies plan to establish a new madrasah after completing the studies interesting one. I don t think there ll b a change in this approach as most of these madrasah students are poor n big moulavi would b too eager abt funding from whataver sources.....
ReplyDelete
ReplyDeleteஇன்று அதிகமானவர்கள் உலகக் கல்வி, மார்க்கக் கல்வி இரண்டும் இரு கண்கள் போல..நாம் முரையாக வாழ இரு கல்வியும் அவசியம் எனப் பேசுகின்றார்கள். ..
ஆனால் இலங்கையைப் பொருத்த
வரையில் முஸ்லிம்களாகிய நாம் உலகக் கல்விக்கே அதிகம் அக்கறை செலுத்துகிறோம்.
மார்க்கக் கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றோம்.
இன்னும் எமது முஸ்லிம் மாணவர்கள் முஸ்லிம் பாடசாலைகளிலேயே ஒழுக்க வீழ்ச்சி கண்டு சீரழிகிறார்கள்..எந்தளவுக்கெனில் இன்று பெரும்பாலான மாணவர்களும் தமக்கான மனைவிமார்களை தமது வகுப்பிலிருந்தே தேர்ந்தெடுக்கின்ற அவல நிலை. ..
இதில் வேறு. ..கலவன் பாடசாலைகளிலே படிக்கச்சென்றால் இஸ்லாத்தையே விட்டு விட்டு ஓடிவிடுவார்கள். .இதுவும் இன்று நடந்து கொண்டு தான் இருக்கின்றது. .
எங்குதான் கற்றாலும்..என்ன பயன் ஒழுக்கமில்லாத கல்வியில். .
இந்தக் கல்வியை இஸ்லாம் ஒரு போதும் வழியுருத்தவில்லை, அங்கீகரிக்கவுமில்லை.
இன்று ஒவ்வொருவரும் தமது ஈமானை இறுதி வரை உறுதியாக வைத்துக் கொள்ள முடியுமாகுமா. ? என்று எண்ண வேண்டிய இந்தக்காலத்தில் ,மற்ற மதத்தினர் இஸ்லாத்தை சரியாகப்புரிந்து கொள்ள வேண்டும் எண்பதற்காக (அவர்கள் புரிந்து கொண்டோ இல்லேயோ இஸ்லாம் கோணல் கிறுக்கல்கள் இல்லாத சீரான மார்க்கம் தான் ) கீழ்த்தரமான சிந்தனையை கட்டுரையாசிரியர் கூரியது மிகப்பெரும் தவறு. ..அவர் தனது சிந்தனையை சீர்செய்து கொள்ள வேண்டும் .
அதேவேளை இஸ்லாமிய அறிவை சரிவரக் கற்ற ஒவ்வொருவரும் மாற்று மதத்தினருக்கு இஸ்லாத்தை எடுத்துச் செல்வது கட்டாயக் கடமை.
அல்லாஹ் என்றுமே எங்களுக்கு சீரான சிந்தனையைத் தந்து அவன் விரும்பக்கூடிய நேரான பாதையில் எம்மை செழுத்துவானாக...