ஜோர்தானில் இஹ்வான்களின், அலுவலகம் மூடப்பட்டது
-BBC-
ஜோர்தன் தலைநகர் அம்மானில் செயல்பட்டுவந்த இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் தலைமையகத்தை காவல்துறை மூடியுள்ளது.
இஸ்லாமிய சகோதரத்துவ கட்சி ஜோர்தானில் வலுவாக இருக்கிறது.
அலுவலகத்தில் இருந்தவர்கள் காவல்துறையால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, அலுவலகம் சீல் வைக்கப்பட்டதாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
அம்மான் நகர ஆளுனரின் ஆணையின் பேரிலேயே காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்ததாகத் தெரியவருகிறது.
இதுவரை அந்த அலுவலகம் மூடப்பட்டதற்கு எந்த காரணமும் கூறப்படவில்லை.
ஜோர்தானில், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மிக வலுவான, அமைப்புரீதியான எதிர்க்கட்சியாக செயல்பட்டுவருகிறது.

Post a Comment