பெண்ணை காப்பாற்றுவதற்காக, உயிரைக்கொடுத்த விமானப்படை வீரர்
கினிகத்தேனை பகுதியில் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற பெண்ணை காப்பாற்ற முயன்ற விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (16) மாலை, கினிகத்தேனை வழியாக ஓடும் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 36 வயது மதிக்கதக்க பெண் நீரில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட விமானப் படை வீரர், அப் பெண்ணைக் காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண்ணைக் காப்பாற்றிய அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பலியான விமானப் படை வீரர் கினிகத்தேனை - யட்டிபேரிய பிரதேசத்தை சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க எஸ்.டீ.மனுக்க இஷான் சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் தெலிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை சம்பவத்தில் உயிர் தப்பிய குறித்த பெண் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment