Header Ads



450 கோடி ரூபாய்க்காக காட்டிக்கொடுக்கப்பட்ட, ஒஸாமா பின்லேடன் - புதிய புத்தகத்தில் தகவல்

பாகிஸ்தானில் அமெரிக்க அதிரப்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-காய்தா தலைவர் பின்லேடன், அந்த (பாகிஸ்தானில் நாட்டு ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின்) கட்டுப்பாட்டில் இருந்ததாக அண்மையில் வெளியான புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 புலனாய்வுச் செய்தியாளரான ஸீமோர் ஹெர்ஷ் எழுதிய, "தி கில்லிங் ஆஃப் ஒசாமா பின்லேடன்' என்ற புத்தகம் அண்மையில் வெளியானது.

 அதில், பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற அதிரிகளை மேற்கோள் காட்டி ஸீமோர் ஹெர்ஷ் எழுதியுள்ளதாவது:

 பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே, அப்போட்டாபாதில் பின்லேடனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, அந்த நாட்டு ராணுவத்தின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்புதான்.

 ஆப்கன் பழங்குடியினருக்கு கையூட்டு அளித்து பின்லேடனின் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்ட ஐ.எஸ்.ஐ., அவரை ரகசியமாக தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்தது. பின்லேடனின் நடவடிக்கைகளை எளிதில் கண்காணிப்பதற்காகவே, ராணுவப் பயிற்சி மையம், ஐ.எஸ்.ஐ. பயிற்சி முகாம் ஆகியவற்றுக்கு மிக அருகே அமைந்த அப்போட்டாபாத் கட்டடத்தில் ஐ.எஸ்.ஐ. தங்க வைத்தது.

 பின்லேடனை ஐ.எஸ்.ஐ. தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோது, அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

 அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே, ராணுவ மருத்துவரான அமீர் அஜீûஸ பின்லேடன் குடியிருப்புக்கு அருகே ஐ.எஸ்.ஐ. அமைப்பு தங்க வைத்தது.

 அமீர் அஜீஸ் அளித்த பின்லேடனின் மரபணு மாதிரியை வைத்துதான், அந்தக் கட்டடத்தில் பின்லேடன் தங்கியிருப்பதை அமெரிக்கா உறுதி செய்தது.

 பின்லேடன் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த  (சுமார் இலங்கை பெறுமதி ரூ.450  கோடி) பரிசுத் தொகையை அமீர் அஜீஸுக்குதான் அமெரிக்கா வழங்கியது.

 இந்தியா: ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு அதிகரித்து வரும் செல்வாக்கைக் கட்டுப்படுத்த, தலிபான்களின் தயவு தேவை என்று ஐ.எஸ்.ஐ. கருதியது.

 மேலும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான மதப் போராளிகளைத் திரட்டுவதற்கு தலிபான்கள் பக்கபலமாக இருப்பார்கள் எனவும் ஐ.எஸ்.ஐ. எண்ணியது.

 இந்த எண்ணங்களை ஈடேற்ற, பின்லேடனைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த ஐ.எஸ்.ஐ. முடிவு செய்தது.

 இந்தியாவின் ராணுவ வலிமையை எதிர்கொள்ள அமெரிக்காவின் தயவும் தேவை என்பதை நன்கு உணர்ந்திருந்த ஐ.எஸ்.ஐ., பின்லேடன் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை அமெரிக்காவிடமிருந்து கவனமாக மறைத்தது.

 இருந்தாலும், பின்லேடனின் தலைக்கு அறிவிக்கப்பட்டிருந்த 2.5 கோடி டாலர் பரிசுத் தொகைக்கு ஆசைப்பட்டு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் பின்லேடன் குறித்த ரகசியத்தை அமெரிக்காவிடம் வெளிப்படுத்தினார்.

 அதையடுத்து அமெரிக்கா நீண்ட காலம் மேற்கொண்ட உளவுப் பணிகளின் முடிவில், அதிரடிப் படையினரால் பின்லேடன் 2011-ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.

 பின்லேடனைக் கொல்ல அமெரிக்கா மேற்கொண்ட முடிவு, பாகிஸ்தான் ராணுவத்துக்கும் முன்கூட்டியே தெரியும் என்று பலர் கருதுகின்றனர்.

 அதனால்தான், பாகிஸ்தான் போர் விமானங்களைப் பற்றி கவலைப்படாமல், அதிரடிப் படை வீரர்கள் வந்த ஹெலிகாப்டர்களுக்கு தாக்குதல் விமானங்களின் பாதுகாப்பு இல்லாமல், பாகிஸ்தான் வான் எல்லைக்குள் எளிதில் நுழைந்து பின்லேடன் தங்கியிருந்த இல்லத்தில் அமெரிக்க வீரர்கள் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வகையில், பின்லேடன் கொல்லப்பட்டதை திட்டமிடப்பட்ட படுகொலை என்றே சொல்லலாம்.
 இவ்வாறு அந்தப் புத்தகத்தில் ஸீமோர் ஹெர்ஷ் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. I read news to pass my time but I don't belive all the news in the media.

    ReplyDelete
  2. @Muslim way: You mean to say Jaffna Muslim is not reliable? Ain't they misleading the muslim community? I wonder why they wont publish my comments?!

    Read news to psaa time? Passing TIME?? SUBHANALLAH!!!

    ReplyDelete
  3. He passed away long before, the one they claimed to have killed(?) is not him.Still that is a mystery... So, before, we publish any news, it is better to verify, whether it is 100% authentic and reliable. We should not publish anything and everything that comes in the media..Mainly, the Western media always try to portray wrong image of Islam and Muslims. I really ardent fan of JaffnaMuslim.com...they are very prompt in reporting news, first hand....I hope and pray them to be more vigilant in their publications or whenever, they post news and article from other sources. This is my humble request.

    ReplyDelete

Powered by Blogger.