Header Ads



இறைத்தூதர் மட்டுமே அறிந்த, 3 விஷயங்கள்


அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி (யூத மதத்தில் இருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து சில விஷயங்களைக் குறித்துக் கேட்டார். "தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்'' என்று கூறினார்.  பிறகு, 

1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?

2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?

3. குழந்தை தன் தந்தையின் சாயலிலோ அல்லது தன் தாயின் சாயலிலோ இருப்பது எதனால்?'' என்று கேட்டார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "சற்று முன்புதான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்'' என்று கூறினார்கள்.

உடனே, அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், "ஜிப்ரீல் தான் வானவர்கற்லேயே யூதர்களுக்குப் பகைவராயிற்றே!'' என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும்.

சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப் படியான சதையாகும்.

குழந்தை(யிடம் காணப்படும் தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது அவனது நீர் (விந்து உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவனது சாயலில் பிறக்கின்றது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளது சாயலில் பிறக்கின்றது'' என்று பதிலற்த்தார்கள்.

(உடனே) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்றும் நான் உறுதி அற்க்கிறேன்'' என்று கூறினார்கள்.

பிறகு, "அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். ஆகவே நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட செய்தியை அவர்கள் அறிவதற்கு முன்னால், தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்'' என்று கூறினார்கள்.

அப்போது யூதர்கள் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களிடம்) வந்தார்கள். (உடனே, அப்துல்லாஹ் பின் சலாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வீட்டினுள் புகுந்து (மறைந்து) கொண்டார்கள்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (யூதர்களிடம்), "உங்களில் அப்துல்லாஹ் பின் சலாம் எத்தகைய மனிதர்?'' என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், "அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் மகனும் ஆவார்; எங்களில் சிறந்தவரும், சிறந்தவரின் மகனும் ஆவார்'' என்று பதிலற்த்தார்கள்.

உடனே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அப்துல்லாஹ் (பின் சலாம்) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?'' என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், "அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!'' என்று சொன்னார்கள்.

மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யூதர்களிடம் முன்பு போலவே கேட்டார்கள். அதற்கு அவர்கள் முன்பு போலவே பதிலளித்தார்கள்.

உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள் வெற்யே வந்து, "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரு மில்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் உறுதி அற்க்கிறேன்.'' என்று சொன்னார்கள்.

உடனே யூதர்கள், "இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்'' என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) குறை கூறலானார்கள்.

(அவற்றைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், "இதைத் தான் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன், அல்லாஹ்வின் தூதரே!'' என்று சொன்னார்கள். (நூல் : புகாரி 3938)

4 comments:

  1. How this Jew knows the answers??

    ReplyDelete
  2. Dear Jaffna Muslim,

    when rasoolallah ask from khafir if Abdullah bin salam converted to islam what you will do ? Then they said as you write "Allah adilirundu awarai kappatruwanaha"Than they already converted to Islam. So how can you write there still kaphir ?

    ReplyDelete
  3. Dear brother Alim, Jews and Christians believe in Allah SWT. Christians call Allah (SWT)with the name Jehovah. Their problem in converting to Islam was accepting uneducated Mohammad (Sal) as prophet. Furthermore Mohammad (Sal) banned those things which Jews were worshipping (statues)which they said will get them close to Allah (SWT). The main reason they don't convert is they had been practising this status worshipping for many generations and they did not want to change that for Mohammad (sal). But Jews and Christians believe in Allah (SWT). Jews are well educated people all the time by the grace of Allah. They read old books. Thus bin Salam knew this because he had read old books. Brothers, Islam is not a new religion. It is just the true copy of all the past religions. The true copies of all religion will say the same t is in Holy Quran. Alhamdulillah, by Allah (SWT)'s grace we have the Quran which is not changed for all these generations.

    ReplyDelete
  4. மாஷா அல்லா...!

    அல்லாஹ் நம் அனைவரையும் இவ்வாறான கேட்ட செயல்களில் இருந்து பாதுகாப்பானாக.

    துரதிர்ஷ்டவசமாக இவ்வாறானா செயலகள் நமது ஒருசில இயக்கவாதிகளிடம் இருப்பதை இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

    எவ்வாறான ஒரு நல்ல மனிதரும் தமது இயக்கத்தில் இல்லாமல் வேறு இயக்கத்தில் இருந்தால் அவரைப் பற்றி இல்லாத பொல்லாத விடயங்களையெல்லாம் அவரிடம் இருப்பதாகக் கூறி அவரைப்பற்றி நல்லதாக நினைத்திருப்பவர்கள் மனங்களில் கெட்ட சிந்தனையை விதைப்பதையே தமது இயக்கப் பணியாக்கிக் கொண்டுள்ளனர்.

    அந்த யூதர்களாவது தமது மதத்தை விட்டு வெளியேறியவர்களைப் பற்றித்தான் கெட்டவார்த்தைகளைப் பரப்பினார்கள் . ஆனால் எம்மவர்கள் தமது வெறிபிடித்த இயக்கத்தை சேராதவர்கள் என்பதற்காக அவர்களது இறைச்சியை பச்சையாக உண்கிறார்கள். அதற்காக யூதர்களை நல்லவர்கள் என்று கூறவில்லை அவர்களது பண்புகளை இஸ்லாம் என்ற பெயரில் தாயிக்கள் என்று தம்மை அழைத்துக் கொள்பாவர்கள் செய்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.