Header Ads



டொனால்டு டிரம்பின் கூட்டத்தில் வன்முறை - 20 பேர் கைது


டொனால்டு டிரம்பின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில் குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சியில் ஹிலாரி கிளிண்டனும் முன்னிலையில் உள்ளனர். எனவே, அதிபர் தேர்தலில் இவர்கள் இருவருக்குமிடையே போட்டி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், கலிபோர்னியாவின் ஆரஞ்ச் கவுண்டியில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்று தனக்கு ஆதரவு திரட்டினார். அவர் தனது உரையை முடித்தபோது வெளியில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்குமிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையில் சென்ற வாகனங்களை அடித்து நொறுக்கினர். காவல்துறையின் காரை பஞ்சராக்கினர். இதையடுத்து அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். மேலும், இதுதொடர்பாக 20 பேரை கைது செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.