Header Ads



முஸ்லிம்களுடன் கோத்தபாய சந்திப்பு - குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமும் வழங்கினார் (படங்கள்)


(எம்.இஸட்.ஷாஜஹான்)

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நீர்கொழும்பு போருதொட்ட பிரதேசத்திற்கு நேற்று திங்கட்கிழமை (28-3-2016) மாலை விஜயம் செய்து பிரதேசத்தைச் சேர்ந்த  முஸ்லிம் மக்களைச் சந்தித்து  கலந்துரையாடினார்.

 இந்த மக்கள் சந்திப்பு போருதொட்ட தக்கியா வீதியில் இடம்பெற்றது. மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லாவின் அழைப்பின் பேரில்  இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது கடந்த அரசாங்கக் காலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் அங்கு வாழ் முஸ்லிம் மக்கள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் வினவினர்.

மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லா அங்கு முதலில்  உரையாற்றும் போது கூறியதாவது,

பொதுபலசேனாவின் பிரச்சினை காரணமாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் கடந்த தேர்தல்களின் போது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார். முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் முஸ்லிம் மக்களுக்கு உள்ள தப்பபிப்பிராயத்தை நீக்கவே முன்னாள் பாதுகாப்புச் செயலாளருடன் முஸ்லிம் மக்களைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினேன். முஸ்லிம் மக்கள் கேட்கும் சந்தேகங்கள், வினாக்களையே நானும் இங்கு முன்வைக்கிறேன். நாட்டை அபிவிருத்தியின் பாதையில் முன்னெடுத்துச் சென்றவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். இதன் காரணமாக கொழும்பு உட்பட சிறுபான்மையினர் வாழும் பல்வேறு பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்தன. ஆயினும் பொதுபலசேனா முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்திய  பிரச்சினைகள் காரணமாக மக்கள்  கடந்த அரசாங்கத்தை சந்தேகித்தனர்.

இந்த சந்திப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் நேரடியாகவே இது தொடர்பாக பொது மக்கள் தமது சந்தேகங்களை கேட்கலாம் என்றார்.

அங்கு வருகை தந்திருந்த மக்கள் தமது கேள்விகளை கேட்டதன் பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அதற்கு  பதிலளித்து உரையாற்றுகையில் கூறியதாவது,

பொது பலசேனாவுடன் இருந்த பௌத்த மக்கள் தற்போது கடும் கோபத்தில் உள்ளனர்.  பொது பலசேனாவின் செயற்பாடுகள் காரணமாகவே  சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தோற்றார் என்று இன்று பௌத்த மக்கள குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். தம்புள்ள பள்ளிவாசல்  தொடர்பான பிரச்சினையில் பொது பலசேனா சம்பந்தப்படவில்லை. அளுத்கமையில் இதற்கு முன்னரும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஆயினும் அப்போது அதனை யாரும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தவில்லை. 'கிரீஸ் பூதம்'  பிரச்சனையிலும் என் மீது பலிபோடப்பட்டது.

 அன்று எமது அரசாங்கத்தில் இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களுக்கு உண்மை நிலைமையை எடுத்துக் கூறவில்லை. இதன் காரணமாக முஸ்லிம் மக்கள் என் மீது சந்தேகப்பட்டனர் என்றார்.


12 comments:

  1. இது ஒரு பதிலா???

    ReplyDelete
  2. Wetkam Ketta Emazu Kaakka Marhal Even Pechcai Ketpaza Toooo

    ReplyDelete
  3. . தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினையில் பொது பலசேனா சம்பந்தப்படவில்லை.

    So neenga than budubala sena

    ReplyDelete
  4. அழுத்கமையில் ஜூன் 2014 கலவரத்துக்கு முன்பும் பிரச்சினைகள் நடைபெற்றுள்ளன. அனால் 15 ஜூன் 2014 அன்று அழுத்கமையில் நீங்கள் அனுமதியளித்த பொதுபல யின் கூட்டத்தில் ஞான சாராவின் உரையின் பின்பு தானே பிரச்சினை தோன்றியது.
    அந்த நேரத்தில் உங்களுக்கு இருந்த அரசியல் பலமே போதும் இந்த கலவரம் நடக்காமல் இருப்பதுக்கு. நீங்கள் விட்ட அறிக்கைகளை முஸ்லிம்கள் இலகுவில் மறக்க மாட்டார்கள்.
    நீங்கள் கனவில் கூட நினைக்க வில்லை உங்கள் அரசு கவிழும் என்று.

    ReplyDelete
  5. வினை விதைத்தவன் வினை அறுத்தான்
    இனி ஒன்னும் பேசி வேலை இல்ல

    ReplyDelete
  6. Thoo vetkam ketta muslimgal innum ivan pinnaal alaigirarhal.

    ReplyDelete
  7. Rajapakshas were watching from distance when monks were
    humiliating Muslims , calling names . Muslim's God was
    called "pig." What did Muslims do to those racist
    animals ? Why was the WHOLE govt watching these things
    happening in public without doing nothing ? And now,
    is it a misunderstanding of Rajapakshas by Muslims ?
    If you all have a tiny bit of human feeling somewhere
    in a corner of your heart . Muslims will be treated
    with a public apology by the whole bunch ! But this
    will be the minimum you can do to repair lost respect.

    ReplyDelete
  8. ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்.

    ReplyDelete
  9. ஏன் இப்போது bothu balasena ஆட்டம் போடுவது இல்லை. அதை யோசித்தாலே உண்மை புரியும்

    ReplyDelete
  10. வாயைப் புளந்து பார்த்து கொண்டே இருங்கள் மனிதன் என்றாலே ஜாதிகள் மதம் கடந்து வெட்கம் ரோசம் மானம் மரியாதை சூடு சொரணை இருக்க வேண்டும்

    ReplyDelete
  11. யார் அந்த தாடி வைத்து தொப்பியோட அந்த கோத்தக்கு முன்னால்: பிர் அவ்ன் வந்து கூட்டம் போட்டாலும் கூடி நிற்பானுகள் போல

    ReplyDelete
  12. Haha @ umar hamza. True engada samooham arasiyal pichcha, pathavi picha edukkura samookam. Sad but this the truth.

    ReplyDelete

Powered by Blogger.