Header Ads



தாக்குதல் அங்கி மீட்பு, கைது செய்யப்பட்டவர் கூறும் காரணம்

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளவரின் இரண்டாவது மனைவியே தகவல்களை பொலிஸாருக்குத் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு-

மறவன்புலவில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட தேடுதலில் வெடிபொருட்கள் சிக்கியதையடுத்து, வீட்டின் உரிமையாளர் தப்பிச் சென்றி்ருந்தார்.

அவரைப் பிடிப்பதற்காக, வன்னேரிக்குளம் பகுதியில் வீதித்தடைகளை பொலிஸார் அமைத்திருந்தனர். நேற்று மதியம் அவர், அங்கு வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர், ரமேஸ் எனப்படும் எட்வேர்ட் ஜூலியன் (வயது 32) என்றும்,13 வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ரமேசின் இரண்டாவது மனைவியே, வெடிபொருட்கள் பற்றிய தகவலை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் ரமேஸ் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிபொருட்களை சில நாட்களுக்கு முன்னரே, மன்னாரில் இருந்து ரமேஸ் அந்த வீட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்.

அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்தே, அவரது இரண்டாவது மனைவி இது பற்றிய தகவலை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.

ரமேஸ் முன்னர், மன்னாரில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தவர் என்றும் கூறப்படுகிறது.

கைதானவர் கூறும் காரணம் இதுதான்!

சாவகச்சேரி பகுதியில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த வெடிபொருட்கள் நேற்று அதிகாலை கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி - அக்கராயன்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் பயங்கரவாத புலானய்வுப் பிரிவினரால் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணையில் சில விடயங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, குறிப்பிட்ட அனைத்து வெடிபொருட்களும் மீன் கொண்டு செல்லும் லொறி ஒன்றிலேயே அந்த வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கைதான நபர் வீட்டின் உரிமையாளரும், லாரியின் சாரதியுமாவார். குறிப்பிட்ட தற்கொலை அங்கி, மற்றும் வெடிபொருட்கள்  முல்லைத்தீவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அவற்றை பயன்படுத்த முடியும் என்பதால் தான் அவற்றை கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எட்வட் எனப்படும் குறிப்பிட்ட நபர் புனருத்தாரணம் வழங்கப்படாத முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் என தெரிவிக்கப்டுள்ளது.

1 comment:

  1. If you wanna stop terrorism. Give them capital punishment.
    Inda subject konjam BBS and its masters a konjam kalakki irukkum.
    Visach chedikalai mulaiyule killi eriya vendum.

    ReplyDelete

Powered by Blogger.