Header Ads



மகிந்தவின் பாதுகாவலர்களின், பெயர்களில் சொத்துக்கள்..?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மூவர் தொடர்பான சொத்து விபரங்களை பொலிஸ் நிதி மோசடி தொடர்பான விசாரணை பிரிவிற்கு வழங்குமாறு, இலங்கை வங்கி உள்ளிட்ட 79 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

ஊழல் ஒழிப்பு தொடர்பான செயலகத்தினால், முன்னாள் ஜனாதிபதியின், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய வன்னியாரச்சி நெவில், திஸ்ஸ விமலசேன மற்றும் தமித் கோமிஸ் ரணசிங்க ஆகியோர் தொடர்பில் இரகசிய பொலிஸாரிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, பொலிஸ் நிதி மோசடி பிரிவினால் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்விசாரணைகள் தொடர்பில், குறித்த மூவர் மற்றும் அவர்களது உறவினர்களின் பெயர்களில் நிதி நிறுவனங்களில் காணப்படும் சொத்து மதிப்பு தொடர்பான விபரம் அவசியம் என பொலிஸார் தெரிவித்தமைக்கு அமையவே, குறித்த உத்தரவை நீதவான் வழங்கியிருந்தார்.

இதன்போது, குறித்த சந்தேகநபர்களின் பெயர்களில் காணப்படும் நிதி நிலைமை குறித்தான அறிக்கையை வழங்குமாறு, இலங்கையிலுள்ள 32 வங்கிகள் மற்றும் 47 நிதி நிறுவனங்களுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.