Header Ads



ராணுவ தளபதியை வடகொரியா கொன்றுவிட்டது - தென் கொரியா

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை, கண்டம்விட்டு கண்டம் பாயும் நெடுந்தூர நவீன ஏவுகணை பரிசோதனை என அடுத்தடுத்து அத்துமீறல்களில் ஈடுபட்டுவரும் வடகொரியா அந்நாட்டின் ராணுவ தலைமை தளபதியை ரகசியமாக கொன்று விட்டதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

பிரபல செய்தி நிறுவனங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின்படி, லஞ்சம் மற்றும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதால் கொரியா மக்கள் ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்த ரி யாங் கில்-லுக்கு சமீபத்தில் ரகசியமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.

வடகொரியாவின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன்-னின் மாமாவான ஜங் சாங் தாயேக் என்பவர் முன்னாள் அதிபர் ஆட்சிக்காலத்தின்போது நாட்டிலேயே இரண்டாவது அதிகார மையமாக கருதப்பட்டார். லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது நினைவிருக்கலாம்.

1 comment:

Powered by Blogger.