Header Ads



"1 லீற்றர் பெற்றோல் 52 ரூபாவிற்கும், 1 லீற்றர் டீசல் 42 ரூபாவிற்கும் விற்பனை செய்யலாம்"

நல்லாட்சி அரசாங்கம் மக்கள் பணத்தை கொள்ளையிட்டு வருவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பெலவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரில்வின் சில்வா மேலும் கருத்து வெளியிடுகையில்,

உலக சந்தையில் எரிபொருளின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்படவில்லை.

ஒரு லீற்றர் பெற்றோல் 52 ரூபாவிற்கும் ஒரு லீற்றர் டீசல் 42 ரூபாவிற்கும் விற்பனை செய்ய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனினும், அரசாங்கம் எரிபொருளுக்கான விலைகளை குறைக்க முன்வரவில்லை.

அனைத்து வரிகள் மற்றும் லாபத்தை உள்ளடக்கி இவ்வாறு எரிபொருளுக்கான விலையை நிர்ணயிக்க முடியும்.

எனினும், நல்லாட்சி அரசாங்கம் ஒரு லீற்றர் பெற்றோலில் 65 ரூபாவும், ஒரு லீற்றர் டீசலில் 53 ரூபாவும் மக்களிடமிருந்து கொள்ளையிடுகின்றது.

ஒரு லீற்றர் பெற்றோல் மற்றும் டீசலில் இவ்வளவு பெரிய தொகை வரி மற்றும் லாபத்தை அறவீடு செய்து மக்களை இந்த அரசாங்கம் சிரமத்தில் ஆழ்த்தி வருகின்றது.

எரிபொருள் விலையை குறைப்பதன் மூலம் முழு நாட்டினதும் வாழ்க்கைச் செலவை குறைக்க முடியும்.

எரிபொருள் விலை குறைவினால் ஏற்பட்டுள்ள நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் பின்பற்றி வரும் மக்கள் விரோத கொள்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ரில்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.