Header Ads



இஸ்லாமியர்களின் நண்பன் என காட்டிக்கொண்ட மஹிந்தவினால், றிசானாவை காப்பாற்ற முடியவில்லை - சஜித்

-அஷ்ரப் ஏ சமத்-

முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில்  மத்திய கிழக்கு  மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அவா் பலஸ்தீன் மற்றும் இஸ்லாமியா்களது நண்பன வெளி உலகுக்கு காட்டி நின்றாா். பலஸ்தீனத்தில் அவா் பெயரில் பாதை ஒன்றை அமைத்து அங்கு போய் திறந்து வைத்தாா்.   ஆனால் அவருடைய ஆட்சிக் காலத்தில் சவுதியில் மரண தண்டனை விதித்து மரணமான றிசானா ரபீக்கை என்ற சிறுமியை அவரால் காப்பாற்ற முடியாது போகிவிட்டது. 

அவரது ஆட்சிக் காலத்தில் இருந்த வெளிநாட்டு அமைச்சுக்கு கூட இதனை தடுத்து நிறுத்த முடியாது போகிவிட்டது. மரண தண்டனை விதித்து மரணமான பின்பே அப்போதேய வெளிநாட்டு அமைச்சருக்கு அதிகாரிகளுக்கும் தெரிய வந்தது என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமேதாச கூறினாா்.

மேற்கண்டவாறு (31)ஆம் திகதி அம்பலாந்தோட்ட பிரதேசத்தில்  வீடமைப்பு நிதியுதவிகளை வழங்கி வைத்து  அங்கு உரையாற்றும்போதே அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்

அவா் தொடா்ந்து உரையாற்றுகையில் -

ஜனாதிபதி  மைத்திரி   - பிரதமா்  ரணில் தற்போதைய ஆட்சியி்ன் கீழ் உள்ள வெளிநாட்டு அமைச்சு அண்மையில் கொழும்பைச் சோ்ந்த ஒரு வீட்டுப் பணிப்பெண்னுக்கும் கல்லெறிந்து மரணதண்டனை விதிக்க்ப்பட்ட  அந்த பெண்னை  மரண தீா்ப்பில் இருந்து அந்தப் பெண்னின் உயிரை  காப்பாற்றியுள்ளது.  இது தான் அரபு நாடுகளுக்கு எல்லாம் சென்று  உலகில் நண்பன் என்று காட்டி கொண்டிருந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு நல்லதொரு உதாரணமாகும்.  

அது மட்டுமல்ல மஹிந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை மக்களை மத ரீதியாகும், இன ரீதியாகும், பிரதேச ரீதியாகும் மக்களை பிரித்து அதில் அவா் குளிகாய சில குழுக்களை நிறுவினாா். 

இந்த நாட்டில் வாழும் தமிழ் சிங்கள, முஸ்லீம், பேகா், மலாயா்  யாவரும் சமம். எல்லாச் சமுகமும் அனுபவிக்கும் சகல உரிமைகளும் சகல சமுகத்தினருக்கும்  உண்டு, இந்த நாட்டில் பிறந்த சகலரும் இந்த நாட்டின் பிரஜைகளாகும்.  இந்த அரசில் சகல சமுகங்களும் சமமாக மதிக்கப்படல் வேண்டும்.

2 comments:

  1. மஹிந்த, "தான் முஸ்லிம் விரோதிதான்" என்பதை மிக அண்மையில் வெளிப்படையாக சொல்லிவிட்டாரே! அவரே அவரது முகத்திரையை கலைத்து விட்டாரே! நீங்கள் அறியவில்லையா?
    ஆனால், உங்களது இப்போதைய ஆட்சியில் இன்னும்பலர் வேடம் போட்டுக்கொண்டே நடிக்கின்றனர். அதுவும் எங்களுக்கு புரிகின்றது.

    ரிசானாவை காப்பாற்றுவதோ, விபச்சாரியை காப்பாற்றுவதோ ஒன்றும் முஸ்லிம்கள் மீதான அன்போ, கரிசனையோ நட்போ கிடையாது... மாறாக, என்று அவர்களது உரிமைகள் மதிக்கப்பட்டு, வழங்கப்பட்டு, அவர்களும் நியாயமாக நடாத்தப்படுவார்களோ அதுவே உண்மையான நட்பும், கரிசனையும் ஆகும்!
    சில சுயநல அரசியல்வாதிகளையும், சில முட்டாள் பொதுமக்களையும் தவிர நாங்கள் இவ்வாறான பேச்சுக்களை (அவைகளை செயல்களில் காணாதவரை) நம்பத்தயாரில்லை.

    ReplyDelete
  2. ஆனா ரிசாட் சேர் அ மட்டும் கன்ன மூடிட்டு நாம்புவோம் என தோழரே. வாழ்க ரிசாட்

    ReplyDelete

Powered by Blogger.