Header Ads



இங்கிலாந்தில் இலங்கை அரசியல் யாப்பு பற்றி கலந்துரையாடல் - ஹக்கீமும் பயணமாகிறார்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இலங்கையின் உத்தேச அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (29) பிரித்தானிய நாட்டின் எடின்பரா நகரில் ஆரம்பமாகியுள்ளது.

இதில் இலங்கையில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பிரதிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான எம்.நிஸாம் காரியப்பரும் பங்கேற்றுள்ளனர்.

அமையப்போகும் புதிய அரசியல் யாப்பில் சிறுபான்மையினரின் உரிமைகள், அபிலாஷைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவது தொடர்பில் மிகவும் ஆழமாக ஆராய்ந்து வலுவான யோசனைகளை தயாரிப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை நாளை இடம்பெறவுள்ள அதன் இரண்டாம் கட்ட கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமும் இணைந்து கொள்வார் என அறிவிக்கப்படுகிறது.  


1 comment:

  1. We in UK hav'nt got any clue about this discussion , got to know thro Jaffna Muslim.
    Political farce being staged.
    Who run the show?

    ReplyDelete

Powered by Blogger.