Header Ads



ஆயுததாரிகளிடம் இருந்து கிறிஸ்தவ பயணிகளை பாதுகாத்த முஸ்லிம்கள்

கென்ய பயணிகள் பஸ் ஒன்றை இடைமறித்த இஸ்லாமியவாத ஆயுததாரிகளிடம் இருந்து கிறிஸ்தவ பயணிகளை முஸ்லிம்கள் பாதுகாத்துள்ளனர். ஆயுததாரிகள் கிறிஸ்தவர்களை தனியே பிரித்தெடுக்க முயன்றபோது அதனை முஸ்லிகள் தடுத்துள்ளனர்.

“கொல்வதாக இருந்தால் எம் அனைவரையும் கொல்லுங்கள் அல்லது எம்மை விட்டுவிடுங்கள்” என்று அந்த ஆயுததாரிகளுக்கு பஸ்ஸில் இருந்த முஸ்லிம் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சோமாலிய எல்லை கிராமமான எல்வாக்கில் இடம்பெற்றிருக்கும் இந்த தாக்குதலின்போது குறைந்தது இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

சோமாலியாவில் இருந்து இயங்கும் அல் ஷபாப் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு கென்யாவின் வடகிழக்கு பகுதியில் அடிக்கடி தாக்குதலை நடத்துகிறது.

இதில் மண்டேரா நகரில் இருந்து தலைநகர் நைரோபியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியே இலக்காகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அல் ஷபாப் குழு பல்கலைக்கழகம் ஒன்றில் புகுந்து 148 பேரை கொன்ற தாக்குதலில் முஸ்லிம்களிடம் இருந்து கிறிஸ்தவர்களை தனியே பிரித்து கொலை செய்திருந்தது.

மண்டேரா நகரில் கடந்த ஆண்டிலும் நைரோபியை நோக்கி பயணித்த பஸ் வண்டி ஒன்றில் இருந்த 28 முஸ்லிம் அல்லாதோரை அல் ஷபாப் கொலை செய்திருந்தது. எனினும் இம்முறை அனைவரும் ஒற்றுமையை வெளிப்படுத்தியதால் ஆயுததாரிகள் திரும்பிச் சென்று விட்டதாக மண்டேரா ஆளுநர் அலி ரொபா குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. What's the motive of these armed groups? They kill ordinary people arbitrarily. I suspect an anti-Islamic movement is pulling the string of these notorious criminals.

    ReplyDelete

Powered by Blogger.