இஸ்லாமியர் என்பதால், துப்பாக்கியால் சுடப்பட்டார்
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பகுதியில் டாக்சி ஓட்டுநர் ஒருவரை இஸ்லாமியர் என்பதால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய டாக்சி ஓட்டுநர் சுடப்பட்ட விவகாரத்தை உரிய கவுரத்துடன் விசாரிக்க வேண்டும் என அமெரிக்காவில் வாழும் இஸ்லாமிய தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பகுதியில் டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் மொரோக்கோ நாட்டவரான இந்த நபர்.
சம்பவத்தின்போது, ஒரு சூதாட்ட விடுதியின் அருகாமையில் இருந்து அந்த நபர் இவரது வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.
வாகனம் புறப்பட்டதும் இவருடன் பேச்சுக்கொடுத்த அந்த நபர், இவரது இனப் பின்னணி குறித்து கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இறைதூதர் நபிகள் குறித்தும் ஐ.எஸ்.அமைப்பு குறித்தும் கடுமையாக விமர்சித்த அந்த நபர், தமது வீடு வந்ததும், பணம் எடுத்து வருவதாக கூறி, காத்திருக்க பணித்துவிட்டு வீட்டினுள் சென்றுள்ளார்.
திரும்பி வந்த அந்த நபர் துப்பாக்கியுடன் வந்து மிரட்டியதுடன், அங்கிருந்து தப்ப முயன்ற டாக்சி ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் அவரது முதுகில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த CAIR அமைப்பு, பாரிஸ் தாக்குதலுக்கு பின்னர் இஸ்லாமியர்களுக்கு எதிராக இதுபோன்ற தாக்குதல்கள் அமெரிக்காவில் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இதேப்போன்று வடக்கு கரொலினா பகுதியில் டாக்சி ஓட்டுநர் ஒருவரை இஸ்லாமியர் என்று கருதி கும்பல் ஒன்று தாக்கிவிட்டு தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சம்பவங்களை இனி மிக அதிகமாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் எதிர்பார்க்கலாம்.. அதற்காகத்தானே பாரிஸில் தாக்குதல் மேற்கொண்டார்கள். இதற்கு முன்பு அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர குண்டு வெடிப்பின் பின்பும் இவ்வாறுதானே நடந்தது!
ReplyDelete