ஹரிபொர்டர் பட வில்லனை விட மோசமானவர் டொனால்ட் டிரம்ப்
இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகளை உடையவரான டொனால்ட் டிரம்ப், தான் செல்லும் இடம் எங்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வருகிறார்.
பாரிஸ் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரையும் கணக்கெடுத்து, ‘தாங்கள் இஸ்லாமியர்கள்’ என பிறருக்கு புரியும் வகையில் அடையாள அட்டை ஒன்றை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.
சில தினங்களுக்கு முன், இஸ்லாமியர்களை அனுமதிப்பதில் உள்ள அபாயத்தைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ளும் வரை அமெரிக்காவில் நுழைய இஸ்லாமியர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகைக்கு கோரிக்கை விடுத்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பினார். இதற்கு குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். புளோரிடா மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மேயர்கள் டொனால்ட் டிரம்ப் அம்மாகாணத்திற்குள் நுழைய தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில், உலகையே கலக்கிய ஹாரிபார்ட்டர் நாவலை எழுதிய பிரபல பெண் எழுத்தாளரான ஜே.கே ரவுலிங், தனது நாவலில் வரும் வோல்டமார்ட் என்ற வில்லனை விட கொடூரமானவர் டொனால்ட் டிரம்ப் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
டொனால்டின் சர்ச்சைக் கருத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் "ஞானசார" தேரரோ? இவரிடம் ஆட்சியை ஒப்படைத்தால்... "குரங்கிட கையில் பூமாலைதான்!"
ReplyDelete