Header Ads



"மதங்களைக் கடந்த மனிதநேயம்" என்ற சுலோகத்துடன் Zam Zam Foundation (படங்கள் இணைப்பு)

மதங்களைக் கடந்தது மனிதநேயம் என்ற சுலோகத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் Zam Zam Foundation இன் நான்கு நிகழ்வுகள் அண்மையில் இடம்பெற்றன.

ஹொரோப்பொத்தானை பதியுத்தீன் மஹ்மூத் மஹாவித்தியாலயத்தின் மாணவர் விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. மறைந்த ஆசிரியர் மர்ஹும் உபைதுல்லாஹ் அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் முகமாக இக் கட்டிடம் அவரது பெயரிலேயே நிர்மாணிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு கஹடகஸ்திகிலிய பிரதேச செயலகத்தின் சிறுவர் கேட்போர் கூடத்திற்காக சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான ஒலி உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.இந் நிகழ்வு கஹடகஸ்திகிலிய பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பல வருடங்கள் பழைமை வாய்ந்த சிங்களப் பாடசாலையான ரத்மல்கஹவெவ மஹா வித்தியாலயத்தின் அதிபர் காரியாலயம் புனர்நிர்மாணம்  செய்யப்பட்டு கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் ராஜகீய பண்டித கிரிகல்வெவ ஞானாலோக தேரர் உரை நிகழ்த்தியதோடு மாணவர்களின் நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.

இறுதியாக கஹடகஸ்திகிலிய முஸ்லிம் மஹா வித்தியாலயத்திற்கான வாசிகசாலை நிர்மாணிக்கப்பட்டு அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு இடம் பெற்றது.



3 comments:

  1. மக்கள் பணத்தில் அடிக்கல் இட்டு திறப்புவிழாவிற்கு முன்டியடிக்கும் அரசியல்வாதிகள் இப்படியான நிகழ்வுகலைப்பார்த்தாவது திருந்தவேன்டும்

    ReplyDelete
  2. அல்ல்ஹா இவர்களின் இந்த நல்லா காரியங்களை மேன் மேலும் பரந்த அளவில் செய்வதற்கு உரு துணையாக இருப்பனாக, இதற்க்கு உழைத்த எல்லோருக்கும் நற்கூலியை வாழ்ந்குவனாக ஆமீன்

    ReplyDelete
  3. nalla vidayam ma sha allah.

    ReplyDelete

Powered by Blogger.