"SLFP கீழ்மட்ட உறுப்பினர்கள் மைத்திரியை ஏற்கவில்லை, சரியான தருணம் பார்த்திருக்கிறார்கள்"
தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேர்தல்களில் வெற்றி பெறமுடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தோற்கடித்தவரே தற்போது அந்தக்கட்சியின் தலைவராக இருக்கிறார்.
இந்தநிலையில் சுதந்திரக்கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களை பொறுத்தவரை அவர்கள் தற்போதைய கட்சி தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே சரியான தருணம் ஒன்றை ஆதரவாளர்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ரத்வத்தை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆளும் கட்சியாக அல்லது எதிர்க்கட்சியாக இருக்கவேண்டும்.
இந்தநிலையில் விடுதலைப்புலிகளின் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவதை தாம் எதிர்ப்பதாக லொஹான் ரத்வத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் எழுச்சிப்பெறலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment