முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு "Ethnic Cleansing"
-எம்.எம். பாஸில்விரிவுரையாளர்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்-
கெடுடி யுத்தத்துக்குப் பின்னரான சர்வதேசச் சூழலில் உள்நாட்டு மோதல்கள் மற்றும் உள்நாட்டு யுத்தங்கள் அதிகரித்தன. இவற்றின் பிரதானமான விளைவுகளுள் ஒன்றாக உள்ளக இடப்பெயர்வு முக்கியம் பெறுகின்றது. 1990இல் 11 நாடுகளில் 1.2 மில்லியன் இடம்பெயர்ந்தோர் காணப்பட்ட அதேவேளை, அது 2009இல் 27.1 மில்லியனாக உயர்வடைந்த காரணத்தினால் ஐக்கிய நாடுகளும் ஏனைய நிறுவனங்களும் இது குறித்து அதிக அக்கறையினை செலுத்த முன்வந்தன. இந்தப் பின்னணியில் நின்று கொண்டே இலங்கையின் வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் குறித்தும் அவர்களை மீளக் குடியமர்த்துவதில் உள்ள சவால்கள் குறித்தும் கலந்துரையாட வேண்டியிருக்கின்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்-
கெடுடி யுத்தத்துக்குப் பின்னரான சர்வதேசச் சூழலில் உள்நாட்டு மோதல்கள் மற்றும் உள்நாட்டு யுத்தங்கள் அதிகரித்தன. இவற்றின் பிரதானமான விளைவுகளுள் ஒன்றாக உள்ளக இடப்பெயர்வு முக்கியம் பெறுகின்றது. 1990இல் 11 நாடுகளில் 1.2 மில்லியன் இடம்பெயர்ந்தோர் காணப்பட்ட அதேவேளை, அது 2009இல் 27.1 மில்லியனாக உயர்வடைந்த காரணத்தினால் ஐக்கிய நாடுகளும் ஏனைய நிறுவனங்களும் இது குறித்து அதிக அக்கறையினை செலுத்த முன்வந்தன. இந்தப் பின்னணியில் நின்று கொண்டே இலங்கையின் வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் குறித்தும் அவர்களை மீளக் குடியமர்த்துவதில் உள்ள சவால்கள் குறித்தும் கலந்துரையாட வேண்டியிருக்கின்றது.
தனிநபர் அல்லது குழுக்கள் அவர்களது வீடுகளை அல்லது சொந்த இடங்களை விட்டு ஆயுத மோதலின் பாதிப்பு, பொதுமைப்படுத்தப்பட்ட வன்முறைச் சூழல், மனித உரிமை மீறல், மேலும் இயற்கை அல்லது மனித அனர்த்தம் காரணமாக நாட்டின் சர்வதேச எல்லையை தாண்டிச் செல்லாமல் உள்நாட்டின் எல்லைக்குள் இடம்பெயர்வதே உள்ளக இடப்பெயர்வாகும் (UNCHR, 1998). இந்த அடிப்படையில் 75,000 இற்கும் மேற்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் 1990 ஒக்டோபர் 30 இல் LTTE இனரால் வெளியேற்றப்பட்டனர். 200 ரூபா பணத்துடன் எதிர்பாராத விதமாக அவகாசமற்ற நிலையில் கொடூரமான சோதனைகளுக்கு மத்தியில் தமது வாழ்விடங்கள், ஏனைய சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது. இச்செயன்முறை ஒரு திட்டமிடப்பட்ட இனச் சுத்திகரிப்பா இல்லையா என்பது குறித்த விவாதம் இன்றைய அரசியல் பரப்பில் சூடு பிடித்துள்ளது.
இனச் சுத்திகரிப்பு குறித்து Andrew Bell என்பவர் குறிப்பிடும்போது 'மதம் அல்லது இனப்பாராபட்டசம், மற்றும் அரசியல், தந்திரோபாய அல்லது கருத்தியல் காரணமாக ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து தேவையற்ற மக்கள் எனக்கருதி குறிப்பிட்ட பிரிவினர் வெளியேற்றப்படுவது இனச் சுத்தகரிப்பு எனப் புரிந்து கொள்ளப்பட முடியும்;' என்றார். Ethnic cleansing can be understood as the expulsion of an "undesirable" population from a given territory due to religious or ethnic discrimination, political, strategic or ideological considerations, or a combination of these (Andrew Bell. (1993). A Brief history of Ethnic Cleansing, Foreign Affairs. USA).
ஏனவே இந்த ஆய்வாளரின் வரைவிலக்கணத்தின் அடிப்படையில் வடமாகாண முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்பட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகப் புலப்படுகின்றது.
பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களில்; 25 வீதமானவர்கள் மாத்திரமே இதுவரை சில கிராமங்களில் ஆங்காங்கே மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 75 வீதமானவர்கள் இன்னும் இடம்பெயர்ந்தவர்களாகவே வாழ்கின்றனா (Hasbullah, 2015) மீள் குடியேற்றப்பட்டவர்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாத சூழ்நிலையிலும் வாழ்கின்றனர். அதேவேளை அரசசார்பற்ற நிறுவனங்கள் பெரும்பாலும் உதவ முன்வராத சூழல் காணப்படுவதுடன் சர்வதேச சமூகமும் பராமுகமாக இருக்கின்றது.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக மீளக் குடியமர்த்தல் தொடர்பில் அரசாங்கத்திடம் ஒரு சிறந்த கொள்கை இல்லை. முஸ்லிம்களின் காணிகள் படையினரின் முகாம்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் காடுகளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக 2012ம் ஆண்டின் அரச வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் முசலி தெற்குப் பிரதேசம் சூழல் அதிகார சபைக்குரிய காட்டுப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது (ர்யளடிரடடயாஇ 2015).
அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தாபனத்தின் இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஹைப்ரிட் நீதிமன்றம் குறித்த தீர்மானத்தில் 2002–2009 வரைக்குமான யுத்த குற்றங்களே விசாரணைக்குட்படுத்த இருக்கின்றது. இதிலும் வடமாகாண முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு விசாரணைக்குட்படுத்த முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, வடமாகாகணத்தில் மிக நீண்ட காலமாக சமாதானமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் 1990இல் இனச் சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்பட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பி வருவதற்கும் மீளக் குடியமர்வதற்கும் உரிமையுடையவர்களாவர்;. இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் அரசசார்பற்ற நிறுவனங்களும் தமது பொறுப்புடைமையினை சரியாக நிறைவேற்ற வேண்டிய தருணம் இதுவாகும். முஸ்லிம் தலைவர்களினதும் சிவில் சமூக அமைப்புக்களினதும் ஒற்றுமைப்பட்ட செயற்பாடு கால்நூற்றாண்டைக் கடந்த வடபுல முஸ்லிம்களின் இடப்பெயர்வு குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தரலாம்.

Post a Comment