இரட்டைத் தலை குழந்தையை காண, அலைமோதும் கூட்டம்
வங்காளதேசத்தில் உள்ள பிரஹ்மன்பாரியா பகுதியில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளியான ஜமால் மியா என்பவரின் மனைவிக்கு சமீபத்தில் பிறந்த இரட்டைத் தலை பெண் குழந்தையை காண திரண்டுவரும் ஆயிரக்கணக்கான மக்களை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்பத்திரி நிர்வாகம் திணறி வருகிறது.
இரண்டு தலைகளுடன் பிறந்த இந்த குழந்தை, இரண்டு மூக்குகளின் நான்கு துவாரங்கள் வழியாக சுவாசித்து வருவதாகவும், இரு வாய்களின் மூலம் பால் குடிப்பதாகவும் பரவிய செய்தியை கேட்டு அந்த ‘அதிசய குழந்தையை’ பார்ப்பதற்கு தலைநகர் டாக்காவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை ஏராளமான மக்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.
சுவாசக் கோளாறுக்காக தீவிர சிகிச்சை பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள இந்த குழந்தையும், அதை ஈன்றெடுத்த தாயும் நல்ல நிலையில் இருப்பதாக டாக்கா அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சுபஹானல்லாஹ்.மனிதனுக்கு அல்லாஹ் ஆரம்பத்தில் நிர்னைத்ததை விட ஏதாவது ஒரு அங்கள் அதிகமானாலும் அல்லது குறைவு பட்டாலும் அதை சமாளிக்க முடியாது.அழகாக படைக்கக்கூடிய வல்ல அல்லாஹ் நம்மை சீரான முறையில் படைத்ததற்கு எவ்வலவு ன்றி செலுத்தினாலும் போதாது.அழகான உறுப்புகளை பெற்றுக்கொண்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாமல் எத்தினை பெரிய பாவங்களை இந்த உறுப்பால் செய்கிறோம் கொஞ்சம் சிந்திப்போமா? அல்லாஹ் நம்மை இவ்வாறு அங்கக்குரைவாகவோ அல்லது அதிகமான அங்கத்தொடோ படித்திருந்தால் நம் நிலைமை எவ்வாறு இருந்து இருக்கும் சிந்திக்க கூடாதா?அழகான நாவு அல்லாஹ்வை திக்கிர் செய்யாது சினிமா பட்டு படிக்கிறது,அழகான கால் அல்லாஹ்வுடைய பள்ளிக்கு போகாது சினிமா தியட்டருக்கும் வேறு பாவமான இடங்களுக்கும் நடக்கிறது,அழகான கண்கள் சினிமாவையும் கேட்ட விடயங்களையும் பார்க்கிறது ஆனால் அல்லாஹ்வின் குரானை பார்த்து ஓதி சிந்திக்காது இவ்வாறு அடிக்கிகொண்டு போகலாம்.சகோதரர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் செயல்படுங்கள் அல்லாஹ் நம்மை நேர்ளிப்படுத்டுவானாக ஆமீன்.
ReplyDelete