Header Ads



மைத்திரியும், ரணிலும் மக்களின் நம்பிக்கையை பாழடிக்கின்றனர்

புதிய நல்லாட்சிக்கான அரசாங்கம் திருடர்களை மீண்டும் சுதந்திரமாக நடமாடவைத்துள்ளது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஊழல்களுக்கு எதிரான அமைப்பின் அமைப்பாளர் வசந்த சமரசிங்க இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எனினும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க போன்ற முன்னாள் அரச பணியாளர்கள் மாத்திரம் விசாரணை செய்யப்படுகின்றனர்.

இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபாலவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மக்களின் நம்பிக்கையை பாழடிப்பதாகவும் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.