யாழ்ப்பாண முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்படவில்லை - அரியநேத்திரன் கொக்கரிப்பு
யாழ்பாணத்தில் முஸ்லிம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றியமைக்கு தமிழ் மக்கள் வெட்கித்தலை குனியத் தேவையில்லை இது இனசுத்திகரிப்பில்லை இனபாதுகாப்பே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ் முஸ்லிம் மக்களை விடுதலைப்புலிகள் கடந்த 1990ம்ஆண்டு வெளியேற்றியமைக்கு ஒவ்வொரு தமிழரும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் இது ஒரு இனசுத்திகரிப்பு எனவும் கூறிய கருத்து தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மாவடிமுன்மாரியில் நேற்று (01) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது அது தொடர்பில் மக்கள் கேட்டபோது அவர் இவ்வாறு பதில் கூறினார்.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நண்பர் சுமந்திரன் கூறிய கருத்தானதுஅவரின் சொந்த கருத்தே தவிர அது தமிழ்தேசியகூட்டமைப்பின் கருத்தல்ல, கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு அவரின் கருத்தை சிலர் ஏற்றுக்கொள்ளலாம் பலர் ஏற்காமலும் விடலாம்.
எனது கருத்து யாழ்முஸ்லிம் மக்களை விடுதலைப்புலிகள் இனசுத்திகரிப்பு செய்யவில்லை இனபாதுகாப்புக்காகவே அவர்கள் பாதுகாப்பாக எந்த தாக்குதலும் இல்லாமல் வெளியேற்றப்பட்டார்கள்.
யாழ்பாணத்தில் இவ்வாறு வெளியேற்றப்படுவதற்கான காரணத்தை ஒவ்வொருவரும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த 1990ம் ஆண்டு பல்வேறு இனப்படுகொலைகள் இடம்பெற்றன இந்த இனப்படுகொலைகளுக்கு அப்போதய, பிரமதாசா ஐனாதிபதியாகவும் டி.பி.விஐயதுங்கா பிரதமராகவும் கொண்ட ஐக்கிய தேசியகட்சி அரசாங்கம் கிழக்கில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை ஊர்காவல் படையில் உள்வாங்கி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பலநூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்களை முஸ்லிம் ஊர்காவல்படையினர் கொலை செய்தனர்.
கடந்த20/06/1990 வளத்தாபிட்டி படு கொலை,29/06/1990, வீரச்சோலை படுகொலை,09/07/1990,மல்லிகைத்தீவு படுகொலை, 08/07/1990, சவளக்கடை படுகொலை,12/08/1990, வீரமுனைபடு கொலை, 09/08/1990, சத்துருக்கொண்டான் படுகொலை,05/09/1990, வந்தாறுமூலைப்படுகொலை, 21/09/1990,புதிர் குடியிருப்பு படுகொலை இவைகளுக்க அப்பால் 1990ல் அம்பாறை தம்பட்டை தொடக்கம் மட்டக்களப்பு வாழைச்சேனைவரை பிரதான வீதியை அண்டிய பல தமிழ்கிராமங்களில் நடந்த படுகொலை சம்பவத்தில் டயர் போட்டு எரித்த சம்பவங்கள் அனைத்திலும் சிறிலங்கா படைகளுடன் முஸ்லிம் ஊர்காவல் படையும் பிரேமதாச அரசால் உருவாக்கப்பட்ட பச்சைப்புலிகள் (கொலகொட்டியா) என்ற விசேட படையிலும் சிங்கள இளைஞர்களுடன் முஸ்லிம் இளைஞர்களும் இணைந்திருந்தனர்.
இவைகள் ஒருபுறம் நடக்க மறுபுறம் ஓட்டமாவடியில் இருந்த இந்து ஆலயம் உடைக்கப்பட்டு அவ்விடத்தில் மாட்டிறைச்சிக்கடை கட்டப்பட்டதும்,கல்முனை தரவைபிள்ளையார் ஆலயம்,சாய்ந்தமருது விஷ்னு ஆலயம், சாய்ந்தமருது பிள்ளையார்கோயில்,சாய்ந்தமருது அரசடிவிநாயகர் ஆலயம், நிந்தவூர் காளிகோயில், நிந்தவூர் முருகன்கோயில்,மீனோடைக்கட்டுபிள்ளையார் கோயில்,கல்முனை கண்ணகை அம்மன் ஆலயம், என்பன முஸ்லிம்களால் அழிக்கப்பட்டதும் வரலாறாகும்.
அப்போதய பிரேமதாசா அரசு தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரத்திலும் முஸ்லிம் இளைஞர்களை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேராமல் தடுப்பதற்காகவும் இந்த தந்திரோபாயத்தை செய்தது உண்மையில் பிரேமதாச இதில் வெற்றி கண்டார்.
இவ்வாறான நடவடிக்கைதான் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைக்கை வழிகோரியது அதனால் துரதிஷ்டவசமான கொலை சம்பவங்கள் காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாசல்களில் இடம்பெற்றன.
இந்தநிலையில் தான் இவ்வாறான சம்பவங்கள் யாழ்பாணத்திலும் நடக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே தான் விடுதலைப்புலிகள் யாழ்முஸ்லிம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர் இதை இனசுத்திகரிப்பாக பார்கமுடியாது இனபாதுகாப்பாகவே பார்க வேண்டும்.
இனசுத்திகரிப்பு எனில் யாழ் முஸ்லிம் மக்களை வெளியேற்றாமல் ஒட்டுமொத்த மக்களையும் புலிகள் கொலை செய்திருப்பார்களானால் அது இனசுத்திகரிப்பு என கூறுவதில் நியாயம் இருக்கும்.
தமிழ் முஸ்லிம் மக்களின் வரலாற்று உறவை திட்டமிட்டு பிரிந்தவர்கள் தமிழரோ அன்றி முஸ்லிம் மக்களோ இல்லை மாறி மாறி ஆட்சிசெய்த அரசாங்கங்களே என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்தி போராடிய வரலாறு உண்டு அவர்களில் பல மாவீர்ர்கள் உண்டு என்பதையும் கூறுவதில் பெருமை அடைகிறேன்.
எனவே யாழ் முஸ்லிம் மக்கள் வெளியேறப்பட்டமைக்கான அடிப்படை காரணம் 1990ம் ஆண்டு ஆட்சி செய்த ஐக்கிய தேசிய கட்சி அரசின் பிரித்தாளும் தந்திரத்தின் சதியே என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் இதற்காக எந்த தமிழரும் வெட்கித்தலை குனிய தேவையில்லை அதற்கான எந்த தீர்மானங்களும் வடமாகாணசபையிலோ கிழக்குமாகாண சபையிலோ நிறை வேற்றத் தேவையில்லை யாழ் மாவட்டத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமை ஆனால் எந்தவொரு முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இதுவரை இதற்காக வெட்கித்தலை குனியவும் இல்லை அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை.இது தொடர்பாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராய் இருந்த மாமனிதர் ரவிராஜ் 2005 ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் தமது வேதனையையும் கவலையையும் தெரிவித்தமையையும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியம் ஞாபகப்படுத்தினார்.

காலக்கெடு கொடுத்து முஸ்லிம்கள் மட்டும் உடுத்தௌடைகலுடன் 500பணம்மட்டும் எடுத்துக்கொன்டு வெலியெருங்கள் எனஉத்தறவிட்ட கொல்லைக்கூட்டத்துக்கு ஒரு பாராலுமன்ற உருப்பினர் சொல்லும் காரனமாம் இது புலிகல் இவ்வாருசெய்ததற்கு காரனங்கள் இதுதான் என தெழிவாககூருவதனால் பிரபாகரன் உயிரோடு இல்லாவிடாலும் இவரிடம் இதற்கான தீவிரவிசாரனைகலை தமிழர்கள் இனப்படுகொலைக்காக அமையவிருக்கும் நீதிபதிகள் நடத்தவேன்டும்
ReplyDeleteBoolshit, then,
ReplyDeleteWhy your terrorists forced to bring with them just only 150 ropees....because of Premadasa....?
Why your terrorists stolen all of their properties....because of Premadasa....?
Why your terrorists did sales centers to sell these stolen items.....because of Premadasa....?
Why your terrorists stolen the Muslims vehicles, Money...because of Premadasa....?
Why your terrorists kidnapped the muslims and demand to pay millions to release them.....because of Premadasa....?
Why your terrorists gave the limited time to vacate from their own place and properties....because of Premadasa....?
Why your terrorists searched & killed the joined muslim memebers in your terrorists groups....because of Premadasa....?
Why your terrorists murdered hundreds of innocent muslims who were in prayer in Kattankudy.......because of Premadasa....?
Why your terrorist kidnapped and killed the innocent muslims......because of Premadasa....?
Why your terrorists kidnapped all of the Muslim Policemen in the Eastern and murdered them...because of Premadasa....?
If Premadasa alive then he will reply you with good enough for your comments on him...
இறுதியாக தமிழ் மக்கள் நெருக்கப்படும்போது யாழ் தமிழரே என்னிடம் சொன்னார் செய்த வினையை அறுக்கிறோம் என்று.
ReplyDeleteஅரியேந்தரே! வரலாற்றை சரியாக பேசுங்கள்.
ReplyDeleteகாத்தான்குடியில் வல்லமையற்ற புலிகள் முஸ்லிம்களின் முதுகில் குத்தியதற்குப் பிறகே முஸ்லிம் இளைஞர்கள் ஊர் காவல்படையின் இணைந்தனர்.இதுதான் வரலாறு.வட முஸ்லிம்களை துப்பாக்கி முனையில் வெளியேற்றியது இனச்சுத்திகரிப்பே. ஆகவே மதிப்பிற்குரிய திரு.சுந்தரின் அவர்கள் கூறியது சரியே.
So, that time Mr. Ariyanendiran in colombo five start hotel....or in the Jaffna bunker..?
ReplyDeleteThanks to Mahinda Rajapaksa who answered Prabakan in his way! LTTE did want to get ríd of Jaffna Muslims in order to have a Hindu 'Rajya' in the North but he couldn't.He should have realised that the Muslims are the integral part of Jaffna!
ReplyDeleteMr.Mr.ariyanenthiran averhal 25 varudamaha ahathihala valanthuvantha mkkalaippatti eppayavathu Vai thirnathlleerhala muslim Kal uyir soththu avvalavu kevelamaha poividdatha
ReplyDeleteHe thinks that He is a great educated MP in the world. He is a racist always think against mislims
ReplyDeleteமுஸ்லிம்களின் பாதுகாப்பு கருதி வெளி ஏற்றி இருந்தால் ஏன் ஐநூறு ரூபாயோடு வெளியேற்றியது உங்கள் சொத்துகலல்லாம் எடுத்துக்கொண்டு வேளிஎருங்கள் என்று குறைந்தது ஒரு வாரம் அவகாசம் கொடுத்திரிக்கலாம் அல்லவா நீங்கள் கதை சொல்வீர்கள் நாங்கள் கேட்டுக்கொண்டு இருக்க என்ன முஸ்லிம்கள் கொண்ட கட்டவில்லை.வடக்கு கிழக்கு போகட்டும் உங்களின் தனி நாடு என்று சொல்லி முஸ்லிம்களை கொலை செய்தீர்கள் பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம் கிராமங்கள் அழிந்சிபோத்தானை,பள்ளியகொடள்ள,புதூர் போன்ற கிராம மக்கள் உங்களுக்கு என்ன்ன செய்தார்கள்.முஸ்லிம்கள் மிகக்கவனமாக இருக்க வேண்டும்.இன்னும் இவர்கள் மனம் திருந்தி வரவில்லை என்பது மட்டும் உறுதி.
ReplyDeleteமுஸ்லிம்களை வெளியேற்றியது அவர்களின் பாதுகாப்பிற்கு என்றால், புலிகளை விட, தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கும் திறமை சிங்கள இராணுவத்திற்கு உள்ளது என்பதை பிரபாகரன் அன்றே உணர்ந்து இருந்தாரா?
ReplyDeleteபாதுகாப்பிற்கு வெளியேற்றினால், மொத்தமாக உருவி கொள்ளை அடித்துக்கொண்டுதான் வெளியேற்ற வேண்டுமா?
ராஜீவ் காந்தி கொலையிலும், இது போன்று சப்பைக் கட்டு கட்டும் சிலர் இருக்கின்றார்கள்.
பாராளுமன்றப் பதவி பறிபோன ஆத்திரத்தில் உளறுகின்றாரோ தெரியவில்லை.
ReplyDeleteஅதென்ன அரியநேந்திரரே,
புலிகள் பள்ளிவாசலில் நடத்திய கொலைபாதகங்கள் உங்கள் பார்வையில் துரதிஷ்டவசமானது. முஸ்லீம் இளைஞர்கள் புலிகளிடமிருந்து தற்காப்புக்காக ஊர்காவற்படைகளுடன் இணையவேண்டி வந்தது மட்டும் திட்டமிட்டதோ..?
உண்மையில் புலிகளினதும் மாற்று இயக்ங்களினதும் கெடுபிடிகளால்தான் ஆரம்பகாலத்தில் இயக்கத்தினரை ஆதரித்து வந்த முஸ்லீம்கள் வேறுவழியின்றி படையினருக்கு ஆதரவாக இருக்க வேண்டியிருந்தது. வரலாற்றைத் திரிக்க முயற்சிக்க வேண்டாம்.
புலிகள் இயங்கிய காலத்தில் அவர்களது தவறுகளுக்கு வக்காலத்து வாங்கி வாங்கித்தான் இன்று அவர்களையே ஒழித்துக்கட்டிவிட்டு இருக்கின்றீர்கள்.
Mr. mahendren, Yes, they are in those countries pay temporarily in this world to reverse back and come back for firm believe in Almighty Allah and to improve their good deeds to save from infinitive punishments in hell, grave, and day of judgments...,This is mercy and blessing of Allah. so lets protect ourselves also from infinitive punishments-Hellfire in Hereafter death....Plz. learn islam..Creations can't do anythings..so think...lets realize for what v r being created... plz..
ReplyDeleteMr. mahendren, Yes, they are in those countries pay temporarily in this world to reverse back and come back for firm believe in Almighty Allah and to improve their good deeds to save from infinitive punishments in hell, grave, and day of judgments...,This is mercy and blessing of Allah. so lets protect ourselves also from infinitive punishments-Hellfire in Hereafter death....Plz. learn islam..Creations can't do anythings..so think...lets realize for what v r being created... plz..
ReplyDelete“சிங்களப்படைகளுடன் முஸ்லிம் இளைஞர் களும் இருந்தார்கள்” என்றும் அதன் காரணத்தால் தான் புலிகள் முஸ்லிம்களை தாக்கினார்கள் என்றும் அரியநேத்திரன் கூறுவதானது சிறு பிள்ளைத்தனமான கூற்று. காரணம் “விடுதலைப் புலிகளுடன் முஸ்லிம் இளைஞர் களும் இருந்தார்கள்” என்று அவரே கூறுகிறார். அப்படியானால் முஸ்லிம்கள்தான் தமிழ் ஈழத்தின் விடுதலைக்காக போராடினார்கள் என்று சொல்ல வருகின்றாரா? அப்படி அவர் ஒத்துக்கொள்வதாக இருந்தாலும் தமிழ் உலகமும் தமிழர்களும் ஒரு போதும் இக் கூற்றை அங்கீகரிக்கப்போவதில்லை அதில் உண்மையுமில்லை. “விடுதலைப் புலிகளுடன் முஸ்லிம் இளைஞர் களும் செயற்பட்ட போதும், அதன் செயற்திட்டங்களை முன்னெடுத்தவர்கள் விடுதலைப்புலிகளாகும். அது போன்றதே “சிங்களப்படைகளுடன் முஸ்லிம் இளைஞர் களும் இருந்தார்கள்” என்பதுவும். (முஸ்லிம் இளைஞர் கள் தமிழ் ஒட்டுக் குழுக்கள் போல் சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து செயல்பட வில்லை என்பதே யதார்த்தம்) எனவே தமிழர்களை தாக்கிய சம்பவங்களை ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் மீது எப்படி சுமத்த முடியும்?
ReplyDeleteமேலும் அரியநேத்திரன் கூறிய தமிழர்களுக்கெதிரான அத்தனை தாக்குதல்களிலும் முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு தாக்கினார்கள் என்பதற்கு ஆதாரங்களை முன் நிறுத்த முடியுமா? அவரால் அல்ல எந்த தமிழர்களாலும் அது முடியாது. புலிகளினதும் ஒட்டுக் குழுக்களினதும் அடாவடித்தனங்கள் எல்லை மீறிப் போன போது கூட அவர்கள் பொறுமை காத்தார்கள் என்பது தான் உண்மை.
இவ்வாறிருக்க “யாழ் முஸ்லிம் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர் இதை இனசுத்திகரிப்பாக பார்க்க முடியாது இன பாதுகாப்பாகவே பார்க்கவேண்டும்” என்று கூறுவதிலிருந்து அரியநேத்திரனுக்கு செலெக்டிவ் அம்னீஷியா இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். புலிகள் யாழ் மண்ணிலிருந்ஒரு து மட்டுமல்ல வடமாகாணத்திலிருந்து ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் வெளியேற்றி விட்டு அவர்களின் சொத்துக்களை சூறையாடி அங்காடியில் விற்பனை செய்தது முஸ்லிம் மக்களை பாதுகாப்பாதற்காவா? அல்லது இச்சம்பவங்களை அவர் மறந்து விட்டாரா?புலிகளின் ஈனச்செயலுக்கு வக்காலத்து வாங்கும் அரியநேத்திரன் பின்வருவனவற்றிக்கு பதில் தருவாரா?
ஜூலை 30, 1990 ல் அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் எதுவித காரணமுமின்றி புலிகளால் கொல்லப்பட்டனர், 3 ஆகஸ்ட் மாதம் காத்தான்குடி பள்ளிவாசலில் புலிகளின் கோரத்தாண்டவம், 5 ஆகஸ்ட்டில் முல்லியங்காட்டில் 17 முஸ்லிம்கள், அதற்கு அடுத்த நாள் ஆறாம் திகதி அம்பாறையில் 33 முஸ்லிம் விவசாயிகள் அநியாயமாக புலிகளால் கொலை செய்யப்பட்டனர். 11 ஆகஸ்ட்டில் ஏறாவூரில் ஒரு கிராமமே கருவறுக்கப்பட்டது, 13 ஆகஸ்ட்டில் வவுனியாவில் மற்றுமொரு முஸ்லிம் கிராமம் கருவறுக்கப்பட்டது, 13 ஆகஸ்ட்டில் புனானையில் வைத்து 7 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் 21செப்டம்பரில் புதுக்குடியிருப்பு கிராமத்தில் 15 முஸ்லிம்கள், 11ஒக்டோபரில் அருகம்பையில் வைத்து 9 முஸ்லிம்கள் என்றுபட்டியல் நீண்டு செல்கிறது. இத்தனையும் தமிழர்களே -புலிகளே –செய்தனர் இவற்றை எந்தக் கணக்கில் எழுதுவது?
அது போல் கிழக்கில் நெல் வயல் அறுவடை காலத்தில் முஸ்லிம்களை எது வித காரணமுமில்லாமல் கொலை செய்ததும் அவர்களின் வயலை அடாவடியாக அறுவடை செய்ததும் எந்தக்கணக்கில் வருகின்றது என்று கூறுவாரா?
“இவ்வாறான நடவடிக்கைதான் புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கைக்கு வழிகோலியது அதனால் துரதிர்ஷ்டவசமான கொலை சம்பவங்கள் காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாசல்களில் இடம்பெற்றன” என்று கூறும் அரியநேத்திரன் வரலாறை அறியவில்லை போலிருக்கிறது. அல்லது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முனைகிறார் என்று கருத வேண்டியுள்ளது. என்னைக் கேட்டால் இத்தனையும் நடத்திய தமிழர்களைத்தான் வெளியேற்றி இருக்க வேண்டும்? என்று கூறுவேன். புலிகள் பள்ளியை தாக்கியது ஆகஸ்ட் 3 ல் முஸ்லிம்களை வெளியேற்றியதோ 23 ஒக்டோபரில் ஆக எல்லா அடாவடித்தனத்தையும் செய்தது புலிகள். எனவே வடபுலத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது “இனச்சுத்திகரிப்பு” என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது?
மேலும் “யாழ் முஸ்லிம் மக்களை வெளியேற்றிதை இன பாதுகாப்பாகவே பார்க்கவேண்டும்” என்று அரியநேத்திரன் கூறுவதை சரி காண்பதாய் இருந்தால் சிங்களவர்கள் தமிழர்களை வெளியேற்றியதையும் “இன பாதுகாப்பாகவே பார்க்கவேண்டும்”. காரணம் தற்கொலை குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட சிங்களவர்கள் அநேகம். >>>>
Hindu tamilan thirundheve mattan, Thuvesam ivarhal reththathil ooriyadhu , kapadem, soolchi yellam iven pontre varhalal aarambathil irundhu pothikkappaduhirathu. .. oh Hindu Tamila. . Just change for peace full Sri Lanka
ReplyDeleteஅரியநேத்திரன் அவர்களே, திரு. சுமந்திரன் அவர்கள் மிகவும் தூரனொக்குடனும், யதார்த்தமாகவும், நாகரிகமாகவும், அறிவுடணும், தெளிவாகவும், பக்குவமாகவும் சிறுபான்மை மக்கள் எல்லோருக்கும் ( தமிழ் முஸ்லிம் ) நன்மை கிடைக்கும் விதமாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கிறார். அவரது முயற்சியை கொச்சை படுத்தும் விதமாகவும் இப்படி நீர் மிகவும் மட்டமான பொய் கருத்தை கூருவது ( பிரபாகரனே வருத்தமும் மன்னிப்பும் கேட்ட விடயத்துக்கு ) இன்னும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை சிக்கலாக்குவதுடன் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும்.
ReplyDelete