Header Ads



திருட்டு சாரதிப்பத்திரம் பெற்று, சவுதி அரேபியாவுக்கு போகாதீர்கள்...!

-KM. JAWFER. JP-

கடந்த 1980 க்கு முன் வெளிநாடு செல்வதென்பது என்னவென்று தெரியாமல் இருந்த சாதாரண மக்களுக்கு அதன்பின் இலங்கையில் கொண்டு வரப்பட்ட திறந்த போருளாதாரக்கொள்கையின் ஒரு பகுதியாக சாதாரண மக்களும் வெளிநாடு பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு போய் தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு கிட்டியது. அன்று முதல் இன்று வரை தொடர்  கதையாக உள்ள வேளிநாட்டுப்பிரயானம் சிலருக்கு சாதகமாகவும் சிலருக்கு பாதகமாகவும் அமைந்து விட்டதை பார்க்கிறோம்.

  இவ்வாறு தொழில் புரிபவர்களில் சாரதியாக தொழில் புரிந்து வருபவர்களுக்கு சில நன்மைகள் கடந்த காலங்களில் கிடைத்து வந்தது .அதன் ஒருவகையில்தான் மத்திய கிழக்கு நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் பெற்றுக்கொண்ட சாரதி அனுமதிப்பத்திரத்தை இன்னொரு நாட்டுக்கு போகும்போது அந்த நாட்டில் அந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை காண்பித்து  புதிதாகச்சென்ற நாட்டுக்குரிய அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடிந்தது. உதாரணத்துக்கு குவைத் சாரதி அனுமதிப்பத்திரத்தை சவுதியிலும் சவுதி பத்திரத்தை கட்டாரிலும் என்ற ஒரு மிகப்பெரும் வாய்ப்பு கிட்டிக்கொண்டு இருந்தது. இப்போது கடந்த ஒரு மாதகாலமாக இதற்க்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. சவுதி நாட்டின் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு எக்காரணம் கொண்டும் கட்டாரில் சவுதிஅரேபியாவின்  அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடியாது என்ற புதிய சட்டத்தை கட்டார் அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டது.

காரணம் அதிகமாக சவுதி அரேபியாவில் சாரதியில்லாமல் வேலை செய்தவர்கள் கட்டாருக்கு சாரதி வேலைக்கு வந்து சவுதி அரேபியாவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை களவாக பெற்று அதை இங்கு கட்டாரில் கொடுத்து மாற்று சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டு வந்தார்கள் இதனை அறிந்த கட்டார் அரசு உடனடியாக சவுதிக்கான சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மற்று சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதை நிறுத்தி விட்டது இதில் மண்ணை அள்ளிப்போட்டது நம் நாட்டு வீரர்கள்தான்.

இதன் விளைவு உண்மையான சாரதியாக வேலை செய்து அனுமதிப்பத்திரத்தோடு வந்த நம் சகோதரர்கள் கடுமையான கஷ்டத்துக்கும் நஷ்டத்துக்கும் ஆளாகி தவிக்கும் கண்ராவியை காண முடிகிறது. இந்த கள்ளர்களின் கைவருசையால் பல்லாயிரக்கணக்கான சவுதி அரேபியாவின் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ள நம் மக்கள் கஷ்டப்படும் அவல நிலை உருவாகியது.

 தற்போது குவைட்டுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தின் வேலை  நடப்பதாக ஒரு செய்தி அடிபட்டுக்கொண்டு இருக்கிறது. தயவு செய்து இவ்வாறான கள்ள சாரதி அனுமதிப்பத்திரம் யாரும் பெற்றுக்கொள்ள வேண்டாம். அவ்வாறான அனுமதிப்பத்திரம் இங்குள்ள பொலிசாரால் கண்டு பிடிக்கப்படும் பட்சத்தில் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிப்பதோடு வேறு எந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல முடியாத வகையில் கடவுச்சீட்டில் சிகப்பு குறி இடப்படும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 

இவ்வாறான கள்ள சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது இந்த நாடுகளுக்கான ஆள் அடையாள அட்டைகள் செய்து கொடுக்கும் யாராக இருந்தாலும் அந்தந்த நாட்டு பொலிசாருக்கு உடனடியாக அறிவித்து நம் சகோதரர்களின்  தொழில்களை பாதுகாக்கவும் நம் நாட்டின் மானம் மரியாதையும் பாதுகாக்க உதவுங்கள். இது அவர்களுக்கு துரோகமாக இருந்தாலும் ஆயிரக்காணக்கான நம் சகோதரர்களுக்கு நாம்  செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
 

No comments

Powered by Blogger.