மோடி அமைதியாக உள்ளார், மதத்தின் பெயரால் நடைபெறும் வன்முறைகளை தடுத்து நிறுத்துங்கள் - சோனியா
பிரதமர் மோடி அமைதியாக உள்ளார்; எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை, என காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா, நேற்று முன்தினம், டில்லியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, மதத்தின் பெயரால் நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்த கேட்டுக் கொண்டார். நேற்று, தன் கட்சி, எம்.பி.,க்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன், பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காந்தி சிலையிலிருந்து, 1 கி.மீ.,யில் உள்ள, ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாக சென்றார்.
பிரணாப் முகர்ஜியை சந்தித்து, மனு அளித்த பின், ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே நிருபர்களை சந்தித்த சோனியா பேசும் போது, ''நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் நடத்தப்படும் அனைத்து செயல்களும், மத்திய அரசுடன் தொடர்புடைய அமைப்புகளால், திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. அவற்றை காங்., பொறுத்துக் கொள்ளாது. ஆனால், பிரதமர் மோடி, அவற்றை ஏற்றுக் கொள்வது போல, அமைதியாக உள்ளார்; எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை,'' என்றார்.

அது ஒன்ருமில்லைதாயே அவருக்கு அமைதிக்கான நோபல்பரிசு கிடைக்கவேன்டுமாம் அதற்காக காத்துகிடக்காராம் அதுவும் விரைவில்கிடைத்துவிடும் என்பதும் இவருக்குதெரிந்துவிட்டது
ReplyDelete