Header Ads



"சடலத்தின் சூடு ஆறுதவதற்கு முன், குழந்தையின் முடி இறக்குவதற்கு முன்"

சமூர்த்தி நிதியத்தில் பசில் ராஜபக்ஸ கை வைக்கவில்லை என சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மரணமொன்று சம்பவித்தால் சடலத்தின் சூடு ஆறுதவதற்கு முன்னதாக சமூர்த்தி நிதி கொடுக்கப்பட வேண்டும்.

குழந்தை பிறந்தால் முடி இறக்குவதற்கு முன்னதாக தாயின் தலையணைக்கு அடியில் சமூர்த்தி நிதி வைக்கப்பட்டிருக்க வேண்டும். பணம் தொடர்பிலான பிரச்சினை இருந்தால் எனக்கு அறிவிக்கவும்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு நான் நன்றி பாராட்டுகின்றேன். ஏனெனில் நான் தொடங்கிய எந்தவொரு நிதியத்திலும் பசில் ராஜபக்ச கை வைக்கவில்லை.

திறைசேரியில் எந்தவிதமான பிரச்சினையும் இன்றி பணம் பெற்றுக்கொண்டதனால் பசில் சமூர்த்தி நிதியில் கை வைக்கவில்லை.

சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் மாதாந்த வட்டியே 500 மில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க காலியில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.