பௌசியின் வீட்டில் குழப்பம், சமாதானப்படுத்திய ஹிஸ்புல்லா, நியாயம் கேட்ட சத்தார்
சுதந்திர கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பௌசியின் வீட்டில் கடந்த சனிக்கிழமை சுதந்திர கட்சி முஸ்லிம் முக்கியஸ்தர்களின் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
இதில் சுதந்திரக் கட்சி முஸ்லிம் சம்மேளனப் பிரிவை கட்டியெழுப்புவது, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.
இதன்போது கடந்த சுதந்திரக் கட்சியின் கடந்தகால செயற்பாடுகள் பற்றியும் சூடான வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்றுள்ளது.
குறிப்பாக பௌஸி, பைஸர் முஸ்தபா ஆகியோர் சுதந்திரக் கட்சியை விட்டு முஸ்லிம்கள் விலக மகிந்த ராஜபக்ஸவே காரணமென வாதிட்டுள்ளனர். இதன்போது குறுக்கிட்ட குருநாகல் மாவட்ட சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர், சத்தார் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி, மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டும்வரை மகிந்தவை புகழ்ந்துவிட்டு, தற்போது தமக்கு கிடைத்த அமைச்சுப் பதவிகளை பாதுகாத்துக் கொள்வதற்காக பௌசியும், பைஸர் முஸ்தாபாயும் மைத்திரிக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார். இது எந்தவித்தில் நியாயம் எனவும் குரல் எழுப்பியுள்ளார்.
இதனால் அங்கு குழப்பகரமான நிலை நிலவியுள்ளது. இதன்போது ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தலையிட்டு, சமரச முயற்சியில் ஈடுபுட்டுள்ளார்,
அந்நேரம் அங்குவந்த அமைச்சர் பௌசியின் மகன் நௌசர் பௌசி, மகிந்த ராஜப்கஸவுக்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அளுத்கம வனமுறைச் சம்பவங்கள் குறித்து ஆராய்ந்து குற்றவாளிகளை இனங்காண்பதற்காக ஒரு குழுவொன்றை அமைக்க வேண்டுமென அரசாங்கத்ததை கோர வேண்டுமெனவும் இதன்போது சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் இக்கூட்டத்தில் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான கருத்துக்களை கூறியமையினாலே ஒரு பதற்ற நிலை உருவானதாக அறியக்கிடைக்கிறது.

ரா. ப. இடமிருந்து நேரடியாகவும் ஆட்சியூடாகவும் நம் சமுகம் வாங்கிக் கட்டியது போதாதென்றா இன்னும் நமது தலைவர்கள் சிலர் அவரது அடிவருடிகளாக இருந்து அவரைத் தூக்கி விடும் முயற்சியை செய்கின்றார்கள்?
ReplyDeleteஅல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் எதிராக செயல் படுபவனுக்கு யார் உதவியாக இருக்கின்றானோ அவன் நாசமாகத்தான் போவான் எந்த கொம்பனாக இருந்தாலும் சரிதான்.
ReplyDeleteAbsolutely 100℅ correct.ur welcome. Jazhakkalla.
Deleteevanuga yaru!
ReplyDelete