இஸ்ரேலும், பலஸ்தீனமும் தனித்தனி அண்டை நாடுகளாகும் - அமெரிக்கா
பாலஸ்தீனப் பிரச்னைக்கு இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தனித் தனி அண்டை நாடுகளாகும் "இரு நாட்டுக் கொள்கை' தீர்வு சாத்தியமே என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளார்.
ஐ.நா. சபையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசுகையில் அவர் கூறியதாவது:
யூதர்களின் ஜனநாயக நாடாக இஸ்ரேலும், அதனருகே தனி நாடாக பாலஸ்தீனமும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் அமைதியான அண்டை நாடுகளாக நீடித்திருப்பது வெறும் கனவு மட்டுமல்ல.
பாலஸ்தீனப் பிரச்னைக்கு "இரு நாடுகள்' தீர்வு சாத்தியமே.
அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் முயற்சிகளைக் கொண்டு, அந்தத் தீர்வை எட்ட முடியும் என்பதை உணரலாம் என்றார் அவர்.

Post a Comment