Header Ads



முஸ்லிம் காங்கிரஸ், பேராளர் மாநாட்டில் சுனாமி..!

-NAJEEB BIN GAFFOOR-

கட்சிப் பேராளர் மாநாடுகள் நடாத்தப்படும் போது ஊடகவியலாளர்களுக்கு விஷேடமாக இடம் ஒதுக்கப்பட்டு ஆசனங்கள் போட்டு, அவர்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பது ஏற்பாட்டாளர்கள் செய்து வரும் சமகாலச் சம்பிரதாயம்! 

ஆனால் மு.கா.வின் 26 பேராளர் மா நாட்டில் ஊடகத்தாருக்கு நடந்ததாகச் சொல்லப்படுகின்ற சில கதைகளை ஜீரணிக்க – நம்ப முடியாமல் இருக்கின்றது. இந்த டயலொக்கை கொஞ்சம் பாருங்கள்….!

மா நாட்டுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு புறம்பான ஏற்பாடுகள் – ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. மு.கா. முக்கியஸ்தர் ஒருவரை நாடிய ஒரு ஊடகவியலாளர் எங்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கப்பட வில்லையே! நாங்கள் எங்கு போய் அமர்வது என்று அந்த மூத்த பேனாக்காரர் கேட்டிருக்கின்றார்.

உங்களை யார் வரச் சொன்னது என்று முன்னாள் மாகாணத்தார் கண்ணத்தில் அறைந்த பாணியில் கேட்க. அதிர்ந்து போன மூத்தவர் டாக்டர் தானே….!என்று இழுக்க!

அப்படியானால் அவரைப் போய்க் கேளுங்கள் என்றிருக்கின்றார் முன்னாள் மாகாணத்தார். ஊடகக்காரர் தட்டுத்தடுமாறி வைத்தியத்தைத் தேடிப் பிடித்து தனது வலியைக் கூறி இருக்கின்றார்.

டாக்டரோ ஏன் முன்னாசனத்தில் போய் அமர்ந்து கொள்ளுங்களேன் என்று கூறி ஊடகங்களை முன்வரிசையில் அமரப் பண்ணி இருக்கின்றார். 

இப்போது வலி குனம்!

நோயாளிகளும் வைத்தியத்தாரும் சில நிமிடங்கள் நிம்மதியில் நிற்க!

வந்தது சுனாமி!

சுனாமி கிளம்பிய தேசத்துக்குப் பக்கத்து தேசத்தில்..!

கோலாகலமாக வந்த விருந்தாளிகள் அணிக்கு, முன்வரிசையில் சீட்டுக்குப் பஞ்சம் ஏற்பட வைத்தியர் சுகமாக இருக்கும்படி சொன்ன ஊடகக்காரர்களிடம் போன ஏற்பாட்டாளர்கள், ஏன் இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள். இது கோலாகலமாக மலே… துங்களுக்கும், துங்கிகளுக்கும் போடப் பட்ட ஆசனம்!
சீட்டைக் காலி பண்ணுங்கள் என்று ஊடகங்களை கேட்க வேறு வழியின்றி அவர்கள் அங்கிருந்து நகர்ந்திருக்கின்றார்கள். நடந்த கதையை மூத்தவர் தனது சகபாடி ஒருவரிடத்தில் குறையாக சொல்ல! அப்படியானால் நீங்கள் வெளிநடுப்புப் பண்ணி இருக்க வேண்டியதுதானே என்று அவர் சொல்லி இருக்கின்றார்.

அது எப்படி நாங்கள் இல்லாவிட்டால் வேறு எவராவது வந்து இந்த செய்தியை சேகரித்து விடுவார்களே என்று மூத்தவர் பதிலுக்கு சொல்லி இருக்கின்றார்.

இதற்கு ஏற்பாட்டாளர்களைக் குறை பட்டுக் கொள்வதா?

அல்லது தொழிலுக்குப் போனவர் சுகம் தேடி நின்றது தவறு என்று கூறுவதா!

இந்தக் கதையின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள இருபக்கத்தையும் கொஞ்சம் தட்டிபாருங்கள்.

அப்போது இந்தக் கதையின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். ஓகே!

2 comments:

  1. முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவமும் அதன் கூஜா தூக்கிகலும் மக்களால் தூக்கி எறியப்படுவது வெகு தூரத்தில் இல்லை.

    நஜீப் பின் கபூர் அவர்களே, இந்த பேராளர் மகா நாட்டில் கட்சிக்கு நான்கு பிரதித் தலைவர்கலாமே. இரண்டு செயலாலர்கலாமே. எங்கே செல்கிறது இந்த கட்சி. பேனா பிடிப்பவர்கள் என்ன செய்கிறார்கள். இவைகளை பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன்.

    ReplyDelete
  2. ஏன் இப்படி? அதுவும் முஸ்லிம் பெயர் தாங்கிய மா நாடு

    ReplyDelete

Powered by Blogger.