முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகத்தில், மலாய் காங்கிரஸின் அலுவலகம்
உலக மலாய் அமைப்பின் தலைவரும், மலாக்காவின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய செனட்டரும், ஆளும் உம்னோ கட்சியின் பிரதித் தலைவருமான முஹம்மது அலி ருஸ்டாம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஓர் அங்கமான மலாய் காங்கிரஸின் அலுவலகத்தை கட்சியின் தலைவர், அமைச்சர்; ரவூப் ஹக்கீமின் அழைப்பை ஏற்று 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் வியாழக்கிழமை (05) மாலை 4.00 மணிக்கு திறந்து வைக்கவுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸில் உறுப்புரிமை பெற்றுள்ள 5000 மேற்பட்ட இலங்கை மலாய் சமூகத்தினரின் நன்மை கருதி இந்த அலுவலகம் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கும், மலேசியாவின் ஆளும் உம்னோ கட்சிக்குமிடையில் நெருங்கிய இருதரப்பு உறவுகள் நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மலாயர்களின் ஆரம்ப கேந்திரத்தளமாக கணிக்கப்படும் கொம்பனித்தெருவில் வசிக்கும் மலாயர்களை இந்தத்தூதுக்குழு சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு வெள்ளிக்கிழமை (06) மாலை கண்டி பேராதெனிய வாடி வீடு கேட்போர் கூடத்தில் கண்டி மாவட்ட மலாயர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
துன்னியா மலாயு, துன்னியா இஸ்லாம் எனப்படும் உலக மலாயர் அமைப்பின் இலங்கைக் கிளை தலைவரும், முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான அன்வர் உலூமுதீன் பிரஸ்தாப மலாய் தூதுக் குழுவிற்கான ஏற்பாடுகளை கவனித்து வருவதாக மலாய் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிர்வாகச் செயலாளருமான முஹம்மது நிசாம் தெரிவித்தார்.
ஜெம்சாத் இக்பால்

Post a Comment