Header Ads



தாய்நாட்டுக்கு திரும்பிவந்து சேவை வழங்குங்கள் - இலங்கையர்களிடம் ஜனாதிபதி மைத்திரி கோரிக்கை


நாட்டினுள் சுதந்திரமும், ஜனநாயகமும் உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தாய்நாட்டுக்கு வந்து சேவையை வழங்குமாறு தாய்லாந்தில் உள்ள இலங்கையர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

4 நாட்களுக்கான விஜயத்தை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள ஜனாதிபதி நேற்று முதல்கட்டமாக இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தக சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகர்களை சந்தித்தார்.

தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தாய்லாந்தைப் போன்றே இலங்கையையும் மிக துரிதமாக அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்டார்.

இதேவேளை, புதிய உற்பத்திகளை மேற்கொள்வதற்கான சூழலை நாட்டில் உருவாக்குமாறு இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியிடம் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

தாம் தாய்லாந்தில் பெற்றுக்கொண்ட தொழினுட்ப அறிவை பயனுள்ள வகையில் உபயோகிப்பதற்கு கிராமிய மட்டத்தில் தொழினுட்ப வசதிகளை விரிவாக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.

1 comment:

  1. Joan nalla pannuraru picha edungada enru solriya naina

    ReplyDelete

Powered by Blogger.