ரஷ்யா எதிர்கொண்ட துன்பியலில், தாமும் பங்கேற்பதாக ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு
எகிப்தின் சினேய் குடாநாட்டில் சிறார்கள் உட்பட 224 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக ரஷ்யா வானூர்தி விபத்தை கேள்வியுற்று தாம் மிக வருத்தமடைந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ரஷ்ய ஜனாதிபதி விளேமிர் புட்டினுக்கு அனுப்பியுள்ள அனுதாபச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களும், அரசாங்கமும், ரஷ்ய மக்களின் துயரத்தை பகிர்ந்து கொள்வதற்கு தம்முடன் இணைந்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று இவ்வாறான அனர்த்தம் ஒன்றினால் மிக துன்பியலுக்கு ஆளாகியுள்ள ரஷ்ய மக்களுக்கு தமது அனுதாபங்களையும் அவர் வெளியிட்டள்ளார்.

Post a Comment