மௌலவி எம்.எம்.ஹில்மி (தீனி) காலமானார்
மடவளை ஜாமியுல் கைராத் ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் ஊர்பரிபாலன சபை என்பவற்றின் பொதுச் செயலாளர் மௌலவி எம்.எம்.ஹில்மி (தீனி) காலமானார்.
கடந்த 31 ம் திகிதி பின்னேரம் கண்டி வைத்திய சாலையில் மரணமான அவரது ஜனாஸா 1ம் திகதி மடவளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர் ரிசாட் பதியுதீன் உற்பட இன்னும் முக்கிய பிரமுகர்கள் பலரும் சமூகமளித்தததுடன் பெறுமளவு பொது மக்கள் இவரது ஜனாஸாவில் பங்கு கொண்டனர்.
இவர் கட்டுகாஸ்தோட்டை சாஹிரா கல்லூரி உற்பட பல்வேறு பாடசாகைளில் மௌலவி ஆசிரியராகப் பணிபுரிந்து அண்மையில் ஊய்வு பெற்றார். கஹவத்தை, பலாங்கொடை முதலான பிரதேசங்கிளில் உள்ள பள்ளி வாயில்கள் பலவற்றில் இவர் பேஷ் இமாமாகக் கடமையாற்றியுள்ளார்.
அவரது மறைவு குறித்து மடவளையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புககள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளன. மடவளை கிராமத்தின் முன்னேற்றத்திற்கும் சமூக கலாச்சார மாற்றங்களுக்கும் இவர் கூடுதல் பங்களிப்புச் செய்து வந்துள்ளமையை பாராட்டத் தக்க விடயமான போதும் இவரது இழப்பு மேற்படி பணிகளுக்கு பாரிய நட்டமாக அமையுமெனப் பலரும் கவலை தெரிவித்தனர்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன்
ReplyDelete