"லண்டனில் வாழ்ந்த இலங்கை மௌலவி, ஷபீக் அவர்களுக்கு நடந்த அற்புதம்' (2 ஆம் இணைப்பு)
-லண்டனிலிருந்து Abdul Razak-
வார்தைகளால் விவரிக்க முடியாத, எழுத்துக்களால் வர்ணிக்க முடியாத அள்ளாஹ்வின் உதவி இதோ. படித்து விட்டு கண்டிப்பாக அவருக்காக அனைவரும் துஆ செய்வீர்கள் என்ற அவாவுடன் இதை அர்ப்பணிக்கின்றேன்.
ஒரு மனிதனுடன் அள்ளாஹ் இரக்கப்பட்டு, அவனுக்கு உதவி செய்ய நாடுகின்ற போது அவனது வாழ்வில் எப்டியெல்லாம் அள்ளாஹ்வின் அருளும் உதவியும் வந்து செல்கின்றன என்பதற்கு அவரது வாழ்க்கையின் இன்றைய தினம் மிகப் பொருத்தமான தருணம் என்றால் மிகையாகாது.
ஆம் அவர் UK வந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. அதில் இறுதி நான்கு வருடங்களும் சிறுநீரக ( Kidney ) நோயினால் பாதிக்கப்பட்டு சுமார் மூன்றரை வருடங்களாக இரத்த சுத்திகரிப்பு ( Dialysis ) செய்யப்பட்டு வருவதை சொந்தக்கார்ர்கள், நன்பர்கள் அனைவரும் அறிவார்கள். இந்த நாட்டில் மிகச்சிறந்த சிகிச்சைகள் கிடைக்கின்ற போதும் அவசரத்திற்கு இலங்கையில் நடப்பது போல் , பணம் கொடுத்து ஒருவரிடமிருந்து Kidney ஐ பெற்று Kidney Transplant பண்ண முடியாது. Transplant waiting List இற்கூடாக பொருத்தமான Kidney ஒன்று கிடைக்கும் வரை Dialysis பண்ணிக்கொண்டே காலம் கடத்தியாக வேண்டும் .
அவ்வாறுதான் மௌலவியவர்கள் ,மூன்னறரை வருடமாக கிழமைக்கு மூன்றுமுறை என்ற அடிப்டையில் 550 இற்கும் அதிகமான Dialysis களை செய்து களைத்துப் போய் Kidney இதுவரை கிடைக்காததால் அடுத்தவாரம் இலங்கையில் நிரந்தரமாக குடியேறி இம்மாத இறுதியில் Kidney Transplant பண்ணுவதற்கு சகல ஆயத்தங்கையும் பூர்த்தி செய்து விட்டு எதிர்வரும் வியாழன் ( 05ஆம் திகதி) இலங்கை செல்ல நாள் பார்துக் கொண்டிருக்கும் வேளையில், இங்கே பல இடங்களிலும் அவருக்காக பிரியாவிடைக் கூட்டங்கள் நடாத்தப் பட்டு முஸாபஹா, முஆனக்கா என அனைத்தும் நடந்தாகி விட்டது. ஆம் வரக்கூடிய வியாழனுக்காக நாள் எண்ணிக் கொண்டிருந்த அவருக்கு இன்று தான் அந்த பேரதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அந்த அள்ளாஹ்வின் உதவியும் கருணையும் அவரை சூழ்ந்து கொண்டது. ஆம் 02.11.2015 காலை 09 மணி -Royal London Hospital இல் இருந்து அந்தச் செய்தி.
ஆம் அவருக்கு வந்த அவசர அழைப்பு அல்லது செய்தி என்னவாக இருக்கும் ?
ஆம் ஒரு Kidney 100 விகிதம் அவருக்கு பொருந்தியுள்ளதாகவும் உடனடியாக அவரை Hospital இற்கு வரும்படியும் வேண்டப்பட்டது . செய்தி கிடைத்து அவசரமாக அங்கே விரைந்த அவர் ,சகல பரிசோதனைகளையும் பூர்த்தி செய்து விட்டு 30 அல்லது 45 நிமிடங்களுக்குள் Kidney Transplant நடை பெற ஏற்பாடு செய்யப்பட்டது.
-:அல்ஹம்துலில்லாஹ்:-
UK இல் கடைசி தருணத்தில் அவர் பெற்றுள்ள இந்த அள்ளாஹ்வின் உதவியானது இலங்கையுடன் ஒப்பிடும் போது பண்மடங்கு மேலானதும் தரமானதும் ஆகும். இன்ஷா அள்ளாஹ் Transplant இன் பின் அவர் கண்விழித்து சாதாரண நிலைக்குத் திரும்பும் வரை நாம் அனைவரும் சங்கைக்குரிய நமது மௌலவி ஷபீக் அவர்களுக்கு இரு கரம் ஏந்திப் பிரார்த்திப்போமாக!
யா அல்லாஹ்! மௌலவியவர்களுக்கு சத்திர சிகிச்சையை வெற்றியாக்கி பூரண சுகத்தை அளிப்பாயாக !!! ஆமீன்
2 ஆம் இணைப்பு
Alhamdhu Lillah Moulavi Shafeek had a successful kidney transplant and recovering from the surgery.
May Allah completely cure his illness and grant him quick recovery.
آللّٰهُمَّ
أَذْهِبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءٌ لَا يُغَادِرُ سَقَمَاً
"O Lord of the people, remove his pain and cure him, You are the one who cures and there is no one besides You who can cure,grant such a cure that no illness remains".
2 ஆம் இணைப்பு
Alhamdhu Lillah Moulavi Shafeek had a successful kidney transplant and recovering from the surgery.
May Allah completely cure his illness and grant him quick recovery.
آللّٰهُمَّ
أَذْهِبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءٌ لَا يُغَادِرُ سَقَمَاً
"O Lord of the people, remove his pain and cure him, You are the one who cures and there is no one besides You who can cure,grant such a cure that no illness remains".

யாஅல்லாஹ் மெளலவி அவர்கள் சீக்கிரமான குணமடைந்து நல்ல நிலைக்குத்ததிரும்பி அன்னாரின் வழமையான பணிகளில் ஈடுபட உதவியும் ஒத்தாசையும் வழங்குவானாக. கடைசித்தருணத்தில் அன்னாருக்கு உதவியும் அருளும் பாலித்த ரப்பே எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக.
ReplyDeleteAaameen
ReplyDeleteMay Almighty Allah protect him form all calamities.
ReplyDeleteAameen
ReplyDeleteAlhathulillah Alkah is great
ReplyDeleteAlhamdhulillaah-Fee amaanillaah
ReplyDeleteAameen
ReplyDeleteMay Almighty Allah grant His Blissful Relief & speedy recovery to Shafeek Hasrath who has been in the forefront of Dawa Deen activities in UK with this phisical discomfort .
ReplyDeleteஇன்ஷா அழ்ழாஹ்,அவர் குணமடைய பிராா்த்திக்கிறேன் . .
ReplyDeleteاللهم اشفه أنت الشافي
ReplyDeleteAmeen
ReplyDelete