Header Ads



ஜனாதிபதி மைத்திரி டேவிட் கமரூன் சந்திப்பு - 6.6 மில்லியன் பவுண்ட்ஸ்களை வழங்க இணக்கம்

இலங்கைக்கு எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு 6.6மில்லியன் பவுண்ட்ஸ்களை பிரித்தானியா உதவியாக வழங்கவுள்ளது.

மோல்டோவாவில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த உதவி வழங்கப்படவுள்ளதாக கமரூன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இராணுவத்தின் மீளமைப்புக்கு உதவி வழங்கும் வதிவற்ற உதவித் திட்டத்தின்கீழ் இந்த நிதி வழங்கப்படவுள்ளது. 

இந்த நிதி இடம்பெயர்ந்தோர் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் ஊழல்களை ஒழிக்கும் திட்டம் மற்றும் மனித உரிமைகள் மீறல்களை கட்டுப்படுத்தல் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயற்படுவதை மையமாகக் கொண்டே இந்த உதவி வழங்கப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.