Header Ads



பௌத்த பிக்குகள் உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு

யுத்தக்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிக்குகள் சங்கம் ஒன்று புத்தளத்தில் உணவுத் தவிர்ப்பை ஆரம்பித்துள்ளது. 

புத்தளம் - கற்பிட்டி விகாரைக்கு முன்னால் இன்று (04) முதல் இந்த உண்ணாவிரத போராட்டம் இடம்பெறுகிறது. 

இதில் ஆறு பிக்குகள் பங்கேற்றுள்ளனர். 

சர்வதேச நீதிபதிகள் இந்த விசாரணைகளில் இணைத்துக் கொள்ளப்படுவது, இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.