நிலைமைகளை உன்னிப்பாக, அவதானித்து வருகிறேன் - மஹிந்த ராஜபக்ச
காட்டிக் கொடுப்பவர்களே நான் உங்களையும் ஆசீர்வாதம் செய்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் மிரிஹானவில் உள்ள தமது இல்லத்தில் அரசியல் தலைவர்கள் சிலரை சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
என்னையும் ராஜபக்ச குடும்பத்தையும் எல்லா விடயங்களிலும் காட்டிக் கொடுத்தேனும் தனது இருப்பினை தக்க வைத்துக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர். அவ்வாறானவர்களையும் நான் ஆசீவாதம் செய்கின்றேன்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இவ்வாறான சம்பவங்ளை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. எனக்கு போதியளவு அனுபவம் காணப்படுகின்றது. நிலைமைகளை நான் உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணன் மரைமுகமாக மிர்ட்டல் விடுவதுபோல் தெரியுது எவ்வாராயினும் நான் ஆட்சியில் இருக்கும் போது மரைமுகமாக எதை செய்தேனோ அதையே இப்போ உங்கலுக்கும் யாபகமூட்டுகின்ரேன் புரிந்துகொல்லுங்கள் பயந்துகொல்லுங்கள் உடனிருந்த தோழமைகளே..........
ReplyDeleteஇதுவரை வரலாற்றில் தோல்வியடைந்த எந்த எதேச்சாதிகாரிதான் இப்படியெல்லாம் பேசவில்லை.
ReplyDeleteவேறொன்றுமில்லை.... மூக்குடைபட்ட வருத்தம் - ஆற்றாமை, அதுமட்டுமல்ல தனது கருத்தை வெளிப்படுத்தக் கூடிய ஜனநாயகச் சூழல் எல்லாம் சேர்ந்து பெரியவரை பேசவைக்கின்றது.