அம்பாறை ஹாடி உயர்தொழில்நுட்பக்கல்லூரியில் கவன ஈர்ப்பு போராட்டம்
இடம் - ஹாடி வளாகம்,
காரணம்: இதுவரை இலங்கையில் இருந்த 17 உயர் தொழில்நுட்பக்கல்லூரிகளும் உயர் கல்வி அமைச்சின் கீழ் இருந்து வந்தன. இவைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் நேரடியாக பல்கலைக்கழக இறுதி ஆண்டுக்கு தகுதி பெறமுடியும். இப்படியான SLIATE என்கிற உயர் கல்வி வழங்கும் கல்லூரியை புதிய அரசாங்க அமைச்சுப்பிரிப்பின் போது SKILL DEVELOPMENT இன் கீழ் மாற்றப்பட்டது. இதனை மீளவும் பெற்று SLIATE இல் கல்வி பயிலும் மாணவர்களின் உரிமையினை உறுதிப்படுத்தவே இந்த கவன ஈர்ப்பு போரட்டம் நடைபெற்றது.
கருத்து:தேர்தல் காலங்களில் மேடை போட்டு மக்களிடம் தங்களின் கருத்தைக் கூறி வாக்கு சேர்த்தவர்களிடம் இப்போது, மக்கள் கருத்து சொல்ல மண் தரையில் அமர்ந்து இருக்க வேண்டி இருக்கிறது... என்ன நல்ல ஆட்சியோ போங்கப்பா!
இந்த SLIATE இல் அதிக அதிகமான தமிழ் பேசும் மாணவர்கள் பயனடைவதும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment