சந்திரிக்காவுக்கு தகுதியில்லை
தேசிய ஒற்றுமை குறித்த நிறுவனத்தில் அங்கம் வகிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு எவ்வித தகுதியும் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வட மாகாணசபையின் 36ம் அமர்வுகளின் போது வட மாகாணசபையின் உறுப்பினர் பிரவுஸ் சிராய்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒற்றுமை குறித்த அமைப்பில் சந்திரிக்கா அங்கம் வகிக்கக் கூடாது. இந்த அமைப்பின் பிரதிநிதியாக சந்திரிக்கா வடக்கிற்கு வரவேண்டியதில்லை.
பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக அனுரத்த ரத்வத்தவை வைத்துக் கொண்டு சந்திரிக்கா செய்த கொடூரங்களை நாம் நன்கு அறிவோம்.
எனவே, தேசிய ஒற்றுமைக்கான நிறுவனத்தின் தலைமைப் பதவி சந்திரிக்காவிற்கு வழங்கப்படுவதனை நாம் கண்டிக்க வேண்டுமென அவர் கூறியதாக சிங்கள பத்திரிரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment