காத்தான்குடி - கர்பலா நகரில் குண்டுவெடிப்பு
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகர் கிராமத்தில் இன்று குப்பைக்குள் கிடந்த குண்டொன்று வெடித்துள்ளது.
இச்சம்பவத்தில், 33 வயதான முகம்மட் இஸ்மாயில் இர்ஸாத் என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் படுகாயமடைந்தவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தனது வீட்டுடன் அண்மித்த பகுதியில் காணப்பட்ட குப்பைகளைக் கூட்டி தீ வைத்தபோது இக்குண்டு வெடித்துள்ளது.
இந்தக் குண்டு கிரேனைட் எனப்படும் கைக்குண்டாக இருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த செய்தி ஞானசாரவுக்கு விருந்தாக அமையாமல் இருந்தால் சரி
ReplyDelete@mohamed, you a right.
ReplyDelete