யானையின் தாக்குதல் - ஆசிரியர் முஹம்மத் இர்பான் வபாத் (படங்கள்)
-யு.எல்.எம் றியாஸ்-
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சல்மடு வட்டை பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஆசிரியர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (22.10.2015) காலை சுமார் 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது முஹம்மது தம்பி இர்பான் எனும் 29 வயதை உடையவரே இவ் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இன்று காலை தனது வயல் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதே இவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார். இரண்டு பிள்ளிகளின் தந்தையான இவர் சம்மாந்துறை அல் - அமீர் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றி வருகிறார்
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி வரும் பிரதேசங்களுள் சம்மாந்துறை பிரதேசமும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment