வடமாகாணத்தில் பொலிஸாருக்கு நாளை ஆட்சேர்ப்பு - முஸ்லிம்களும் இணையலாம்..!
வடமாகாணத்துக்கான தமிழ் பேசும் பொலிசாருக்கான ஆட்சேர்ப்பு நிகழ்வு நாளை வவுனியாவில் நடைபெறவுள்ளதாக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தினுள் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களில் பொதுமக்களுடன் நல்லுறவை கட்டியெழுப்பி, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக தமிழ் பேசும் இளைஞர்களை பொலிஸ் சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்காக சிறிது காலத்துக்கு முன் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.
இதனூடாக சுமார் 400 இளைஞர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிக்குத் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், அவர்கள் முற்றிலும் வடக்கு மாகாண பொலிஸ் நிலையங்களில் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்.
இதற்கான நேர்முகப் பரீட்சை நாளை வவுனியா காமினி வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையே வடக்கில் கடமையாற்றும் பொலிசாருக்கு தமிழ் மொழி அறிவைப் பெற்றுக் கொடுப்பதற்கான செயற்திட்டம் ஒன்றையும் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

கட்டாயம் இளைய சமுதாயம் இதன் மீது உந்தப்படவேண்டும்.சிறுபான்மை இனத்தின்மீது மேற்கொள்ளும் வன்முறைகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். மட்டுமின்றி இதை தொழிலாக மட்டும் கருதாமல் ,தனது கட்டாயகடமையையாகவும்,நீதிநேர்மையாகவும்,நிதானத்துடனும் கய்யயாலவேண்டும்.
ReplyDeleteஇது ஒரு நல்ல சந்தர்பம் ,கட்டாயம் இளைய சமுதாயம் இதன் மீது உந்தப்படவேண்டும்.சிறுபான்மை இனத்தின்மீது மேற்கொள்ளும் வன்முறைகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். மட்டுமின்றி இதை தொழிலாக மட்டும் கருதாமல் ,தனது கட்டாயகடமையையாகவும்,நீதிநேர்மையாகவும்,நிதானத்துடனும் கய்யயாலவேண்டும்.
ReplyDeleteஇதில் கட்டாயம் நம் சமுதாய இளைஞர்கள்சேரவேண்டும் அதே வேலை நம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் சகோதரர்கள் போலிஸ் பிரிவில் சேர்வது சம்மந்தமாக சம்மதப்பட்ட அமைச்சுடன் கலந்தாலோசிக்க வேண்டும்,நம்முடைய வணக்க வழிபாடுகளுக்கான நேர ஒதுக்கீடுகள் விஷேசமாக ஜும்ஆ உணவு வகைகள் தங்குமிட ஏற்பாடுகள். முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.கடந்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்காலத்தி D.B.விஜேதுங்க ஜனாதிபதி காலத்தில் இவ்வாறு ஒரு சந்தர்ப்பத்தில் போலிஸ் வேலைக்கு சேர்ந்த நம் சகோதரர்கள் பயிற்சிக்கால பகுதியில் உணவு மற்றுமுண்டான பிரச்சினை காரணமாக இடை நடுவில் வெளியேறியது.இதையெல்லாம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
ReplyDelete