Header Ads



மோதிக் கொள்ள வேண்டாம் - பிரதமர் ரணில்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்களுடன் மோதிக் கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தொழிற்சங்கங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் இணைந்து தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க விவகாரங்களில் கூட்டமைப்பு அமைச்சர்களுடன் மோதிக் கொள்வதனை தவிர்க்க வேண்டுமென ஜாதிக சேவக சங்கமய உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

ஐந்து ஆண்டு தேசிய திட்டமொன்றின் அடிப்படையில் ஆட்சி முன்னெடுக்கப்பட உள்ளது.

தொழிற்சங்கங்கள் அமைச்சர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் முரண்பாடுகள் இந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் முயற்சியை பாதிக்கும்.

எனவேää தொழிற்சங்கங்கள் நேரடி மோதல்களை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்கää அண்மையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.