Header Ads



துருக்கிய வீதியில் நெஞ்சை நெகிழவைக்கும், சிரிய குழந்தையின் கதறல் (வீடியோ)


/Mohamed Naushad/

இந்த சிறுமி சிரியாவில் இருந்து துருக்கியில் தஞ்சம் புகுந்துள்ள அகதி குடும்பத்தை சேர்ந்தவர். குடும்ப வறுமை காரணமாக வீதி ஓரத்தில் டிஷு பேப்பர் விற்கிறாள். வீதியில் ரோந்து வரும் பொலிஸார் அவளை நெருங்குகின்றனர். 

அவளோ சீருடையை கண்டதும் மிரண்டு வீதியால் போவோரிடம் தஞ்சம் புகுந்து தன்னை காப்பாற்றுமாறு மன்றாடுகிறாள். பொலிஸார் அவளைப் பற்றி தெரிந்துகொள்ள அன்பாகத்தான் நெருங்குகின்றனர். 

இருந்தாலும் அவளுக்கு இருப்பது சீருடைகள் மீதான அச்சம். சீருடை கொடுமைகளை சிரியாவில் தொடர்ந்து கண்டதால் ஏற்பட்ட உளவியல் பாதிப்பே இது என இந்தக் காட்சியை பதிவு செய்துள்ளவர்கள் விளக்கமளித்துள்ளனர். மேலும் இந்த சிறுமி அடிக்கடி வாயிலும் மூக்கிலும் விரலை வைத்து செய்யும் சைகை மன்னிப்பு கேட்பதற்கான மன்றாட்டமாம். இது அரபு குழந்தைகளின் வழக்கமாம். கடைசியில் அவளை பொலிஸார் அவளின் பெற்றோரிடம் ஒப்பைடக்கின்றனர்.

4 comments:

  1. ya allah ella kulandaihalukkum ella muslimkalukkum nee kirufaiseywayaha..

    ReplyDelete
  2. தொழுவதிலும் நோன்பு வைப்பதிலும் புனித யாத்திரைக்காக பல தடவைகள் செல்வதிலும் காண்பிக்கும் அக்கறையை ஏழைகளை பரிபாலிப்பதிலும் அகதி மக்களை ஆதரிப்பதிலும் காண்பிக்கலாமே..?

    சவூதியிலும் புரூணையிலும் தங்கத்தால் கழிப்பறையை அலங்கரிக்கும் அல்லாஹ்வின் அடியார்களுக்கு இந்த ஏழைச்சிறுமியின் அவலத்தை தீர்க்கும் வழியில்லையா அல்லது மனமில்லையா..?

    ReplyDelete
    Replies
    1. இதை தான் நானும் எனது சமுதாயத்திடம் கேட்கிறேன் திருந்துகிறார்கள் இல்லை

      Delete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் பல சிரியா குழந்கைளை துருக்கியல் நேரில் கண்டுள்ளேன் அந்த நேரங்களில் என் கண்கள் கலங்கின ஆனால் இன்று என் இதயம் வழிக்கிறது மனதால் பாதிக்கப்பட்ட இக்குழந்தைகளின் எதிர்காலம்??? யா அல்லாஹ் இந்த ஷீயாக்களை எங்கள் பதுஆக்களை ஏற்று அழித்து விடுவாயாக யா அல்லாஹ்.என்னை மண்ணிப்பாயாக இப்படி பதுஆ செய்தமைக்காக.

    ReplyDelete

Powered by Blogger.