மகிந்த ராஜபக்சவுடனே, மக்கள் இன்னும் உள்ளனர் - பிரசன்ன
நாட்டு மக்கள் இன்னும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மினுவங்கொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் அதிகாரச் சபைக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாத்து 2020 ஆம் ஆண்டில் எமது அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும்.
வடக்கு, கிழக்கில் யுத்தம் நடைபெற்ற போதே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த நேரத்தில் அதனை செய்யவில்லை.
நாட்டின் மீதுள்ள அன்பால் தற்போதைய தேசிய அரசாங்கம் அமைக்கப்படவில்லை. அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சட்டமூலமே முதலில் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனை நாங்கள் எதிர்க்கின்றோம்.
பெரும்பான்மை பலம் இல்லை என்று கூறி, 100 நாட்களில் நிறைவேற்ற போவதாக கூறிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள போதிலும் பொருட்களின் விலைகளை குறைக்கவில்லை.
அத்துடன் நாடாளுமன்றத்தில் இன்று ஜனநாயகம் இல்லை. பொதுத் தேர்தலில் நாங்கள் தோல்வியடையவில்லை. தடைகளுக்கு மத்தியில் பின்னடைவுக்கு உள்ளானோம். எனினும் மக்கள் இன்னும் மகிந்த ராஜபக்சவுடன் உள்ளனர்.
மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததும் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டு மகிந்தவை விமர்சித்த போதும் மக்கள் மகிந்தவுடனேயே இருந்தனர் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

What ever he says that is correct,even if says America is part of sri lanka then it's too correct. Let him wake up from the dream now.
ReplyDeleteபிரசன்னாவுக்கு எங்கிருந்து இவ்வளவு அறிவு வந்ததோ? இன்னும் முயற்சி செய்தால் இவரும் ஜனாதிபதியாக வாய்புள்ளது
ReplyDelete